அயோத்தியில் வழிபாடு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி மறுப்பு
டெல்லி:
அயோத்தியில் சர்ச்சைக்கு அப்பாற்பட்ட நிலத்தில் மத வழிபாடுகள் நடத்த அனுமதிக்கக் கோரிமத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.
அயோத்தியில் மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சர்ச்சைக்கு அப்பாற்பட்ட67 ஏக்கர் நிலத்தில் எந்தவிதமான மத வழிபாடும் நடைபெறக் கூடாது என்று கடந்த ஆண்டு மார்ச்மாதம் உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
ஆனால் சர்ச்சைக்குரிய இடத்தை விட்டு விட்டு சர்ச்சைக்கு அப்பாற்பட்ட நிலத்தை விடுவிக்கவேண்டும் என்றும் அங்கு மத வழிபாடு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கிக் கொள்ளவேண்டும் என்றும் கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்திருந்தது.
சர்ச்சைக்கு அப்பாற்பட்ட அந்த இடத்தைத் திரும்பப் பெற்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பிடம்தரவும் மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. நீதிபதி ராஜேந்திர பாபுதலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் தன் தீர்ப்பில்,
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்தவழக்கு முடியும் வரை மசூதி இடிக்கப்பட்ட இடம், அதைச் சுற்றியுள்ள நிலம் ஆகியவை மத்தியஅரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். அங்கு யாரையும் வழிபாடு நடத்த அனுமதிக்கக்கூடாது. இது தொடர்பாக கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்ந்து அமலில் இருக்கவேண்டும்.
இதனால் அந்த நிலத்தை விடுவிக்க வேண்டிய அவசியம் இல்லை. மதக் கலவரத்தைத் தடுக்கவும்அசம்பாவிதங்கள் நடைபெறுவதைத் தடுக்கவும் மத்திய அரசின் இம்மனுவைத் தள்ளுபடிசெய்கிறோம் என்று நீதிபதிகள் கூறிவிட்டனர்.
சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடத்தில் உண்மையிலேயே ராமர் கோவில் இருந்ததா என்பதைக்கண்டறிய அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம் சமீபத்தில்உத்தரவிட்டது. அதன்படி அங்கு தற்போது அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன என்பதுநினைவுகூறத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications