வைகோவை விடுதலை செய்ய முடியாது: ஜெ. திட்டவட்டம்
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளரான வைகோவைவிடுதலை செய்ய இயலாது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தமிழக பட்ஜெட் குறித்த விவாதம் சட்டசபையில் நடந்து வருகிறது. அப்போது வைகோ கைதுவிவகாரம் குறித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி உறுப்பினரான சந்தானம் கேள்விஎழுப்பினார். அதற்கு ஜெயலலிதா பதில் அளிக்கையில்,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள பொடா சட்டத்தின் கீழ்தான் வைகோ கைது செய்யப்பட்டுள்ளார்.
விடுதலைப்புலிகள், தமிழர் விடுதலைப் படை, தமிழர் மீட்சிப் படை என்பன உள்ளிட்ட மொத்தம்32 அமைப்புகளை மத்திய அரசு பொடா சட்டத்தின் கீழ் தடை செய்துள்ளது.
இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ள புலிகள் அமைப்பை ஆதரித்து வைகோ பேசியதால்தான்வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட 42 பேர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 41 பேர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். பொடா சட்டத்தின் கீழ் மொத்தம் 8வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. பொடா வழக்குகளை விசாரிப்பதற்காகவேசென்னை-பூந்தமல்லியில் சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.
வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட அனைவரும் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பொடாசட்டத்தின் அடிப்படையில்தான் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே அவர்களை விடுதலை செய்யமுடியாது.
மேலும் தற்போது உச்ச நீதிமன்றத்தில் வைகோ தொடர்ந்த வழக்கு அரசியல் சாசன முறைப்படிநடந்து வருகிறது. அதில் தமிழக அரசு தலையிடாது என்றார் ஜெயலலிதா.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications