கத்திக் குத்துப் பட்டும் ரவுடியைப் பிடித்த பெண் போலீஸ் அதிகாரி
சென்னை:
ரவுடி கத்தியால் குத்திக் காயப்படுத்தியபோதும் உயிரைப் பொருட்படுத்தாமல் துணிச்சலாகசெயல்பட்டு அவனை வளைத்துப் பிடித்தார் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர்.
வட சென்னையில் உள்ள பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர்ராஜேஸ்வரி. இந்தப் பகுதியில் ரவுடிகள் அட்டகாசம் அதிகம்.
அப்படிப்பட்ட ரவுடிகளில் ஒருவன்தான் செல்வம். பல கொலை முயற்சி வழக்குகள், திருட்டுவழக்குகளில் அவன் சம்பந்தப்பட்டிருந்தான். தலைமறைவாக இருந்த செல்வத்தைப் பிடிக்கபோலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில் மயிலாப்பூர் பகுதியில் செல்வம் இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.இதையடுத்து ராஜேஸ்வரி தலைமையிலான போலீஸ் படை அங்கு விரைந்தது.
ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு இடத்தில் வைத்து செல்வத்தை போலீஸார் மடக்கினர்.போலீஸாரைப் பார்த்த செல்வம், கையில் வைத்திருந்த கத்தியை எடுத்தான். ஆனால் சற்றும்கவலைப்படாத ராஜேஸ்வரி, செல்வத்தை நெருங்கிப் பிடிக்க முயன்றார்.
ஆனால் அவரது கையில் சரமாரியாக குத்தினான் செல்வம். இதையடுத்து அவரது கையிலிருந்துரத்தம் கொட்டத் தொடங்கியது. இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் செல்வத்தை மேலும்நெருங்கினார் ராஜேஸ்வரி.
கூடவே மற்ற போலீஸாரும் செல்வத்தை வளைத்துப் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவன்காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டான்.
ராஜேஸ்வரி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications