ஈராக் போரை கண்டித்து ஒரு நிர்வாண போராட்டம்

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வரும் போரைக் கண்டித்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தஒருவர் உடம்பில் பொட்டுத் துணி கூட இல்லாமல் நிர்வாணமாக நடந்தார்.

திருப்பத்தூரை அடுத்துள்ள அக்ரவரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவருக்கு 40வயதாகிறது. ஆனால் இன்னும் திருமணம் ஆகவில்லை.

இவருக்கு ஒரு விசித்திரமான பழக்கம் உள்ளது. வழக்கமாக எல்லோரும் முன்னால் நடந்துபோவார்கள். ஆனால் கடந்த 1991ம் ஆண்டு முதல் இவர் பின்னாலேயே நடந்து வருகிறார். எங்குநடந்து போனாலும் பின்புறமாகவே நடந்து போவார்.

உயிரியல் பட்டதாரியான இவர் வேலையில்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். எப்போதுமே உலகஅமைதி குறித்துப் பேசி வருவார். இதை வலியுறுத்தி கடந்த 12 வருடமாக யாருடனும் பேசாமல்மெளன விரதமும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் ஈராக் மீதான அமெரிக்க போர் குறித்து இவர் வருத்தமடைந்தார். ஈராக் போரைஎதிர்த்து எழுதப்பட்ட தட்டிகளை எடுத்துக் கொண்டு திருப்பத்தூர் காந்தி சிலை அருகே வந்தார்மணி.

பின்னர் தன் உடலில் இருந்த உடைகளை ஒவ்வொன்றாக கழற்றினார். சுத்தமாக அத்தனைஆடைகளையும் கலைந்து விட்டு சிறிது தூரம் பின்னோக்கி நடந்தார்.

அவருடைய இந்த விபரீதமான போராட்டத்தைப் பார்த்த பெண்கள் கண்களை மூடிக் கொண்டேஅங்கிருந்து அகன்றனர்.

இந்தத் தகவல் உடனடியாகப் போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக விரைந்துவந்து மணியை வளைத்துப் பிடித்து கைது செய்தனர். பின்னர் வேனுக்குள் அமர வைத்துகட்டாயப்படுத்தி ஆடைகளை அணியச் செய்தனர்.

அதன் பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+