இலங்கை கடற்படை கப்பல் மீது தாக்குதல்: புலிகள் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

திரிகோணமலை கடல் பகுதியில் இலங்கை கடற்படை வீரர்கள் சென்ற கப்பல் மீது துப்பாக்கிச் சூடுநடத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தாக்குதலைத் தாங்கள் நடத்தவில்லை என்று புலிகள்மறுத்துள்ளனர்.

வடக்கு இலங்கையில் உள்ள திரிகோணமலை கடல் பகுதியில் சுமார் 1,700 வீரர்களுடன்கடற்படையின் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது அப்பகுதியில் வந்த ஒரு சிறிய கப்பல் கடற்படையினரின் கப்பல் மீது சாராமாரியாகத்துப்பாக்கியால் சுட ஆரம்பித்தது. இதையடுத்து கடற்படையினரும் அந்தச் சிறிய கப்பலை நோக்கிப்பதிலுக்குச் சுட்டனர்.

புலிகள்தான் தங்கள் கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கடற்படை குற்றம் சாட்டியுள்ளது.ஆனால் புலிகள் இந்தப் புகாரை மறுத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் தீவிர விசாரணைநடத்தினர். தாக்குதல் நடத்தியது புலிகள் அல்ல என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தையைக் குலைக்கும் நோக்கத்துடன் வேறு யாரோதான் இந்தத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும் கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் சீன மீன்பிடிப் படகு ஒன்று கடுமையாகத் தாக்கப்பட்டுமூழ்கடிக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. அந்தப் படகில் இருந்தவர்கள்தான கடற்படை கப்பல்மீது தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்றும் கண்காணிப்புக் குழுவினர் கூறியுள்ளனர்.

கடந்த பிப்ரவரியில் ஜெர்மனியில் ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தொடங்கிய அன்று மூன்றுகடற்புலிகள் தாங்கள் வந்த படகைத் தகர்த்து அழித்து தங்களையும் அழித்துக் கொண்டனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் கடல் பகுதிகளில் மேலும் இரண்டு, மூன்று தகாதசம்பவங்கள் நடந்து விட்டன. ஆனாலும் ஜெர்மனி பேச்சுவார்த்தைகளோ அல்லது கடந்த மாதம்ஜப்பானில் நடந்த ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளோ பாதிக்கப்படவில்லை. வெற்றிகரமாகவேநடந்து முடிந்தன.

இந்நிலையில் நேற்று மீண்டும் கடல் பகுதியில் இதுபோன்ற சம்பவம் ஏற்பட்டிருப்பதுகுறிப்பிடத்தக்கது. கடல் பகுதியில் நடமாடுவது தொடர்பான விவகாரத்தில் இனிமேல்எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று ஜப்பான் பேச்சுவார்த்தைகளின்போதுபுலிகளும் இலங்கை அரசும் உறுதியெடுத்துக் கொண்டனர் என்பதும் நினைவுகூறத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+