அரசு மருத்துமனைகளில் கட்டண வார்டுகள் அமைக்க அரசு திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் எலும்பு வங்கி தொடங்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் செம்மலைதெரிவித்தார்.

சட்டசபையில் சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து அவர் பேசுகையில்,

சென்னையில் தொடங்கப்படவுள்ள இந்த முதல் எலும்பு வங்கி மூலம் புற்றுநோய், தண்டுவட பாதிப்பு உள்ளிட்டபிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவைப்படும் எலும்புகள் வழங்கப்படும்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் இந்த எலும்பு வங்கி செயல்படும்.

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காசு கொடுத்து சிகிச்சை பெறும் உயர் தர மருத்துவப் பிரிவுகளும் அமைக்கப்படும்.இதன் மூலம் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையான சிகிச்சையை அரசு மருத்துவமனைகளில் குறைந்த செலவில் பெற வழிவகை செய்யப்படும்.

மாவட்டத் தலைநகரங்கள்தோறும் நர்சிங் பள்ளிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநிலத்தில் உள்ள 5 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 315 கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும். இதற்காக ஐந்து கல்லூரிகளிலும்ரூ. 1 கோடி செலவில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

மாநிலத்தில் தற்போது தொழுநோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து விட்டது. 10,000 பேருக்கு 2.8 பேருக்குமட்டுமே தற்போது தொழுநோய் உள்ளது. மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வுக் கல்வித் திட்டம்அமல்படுத்தப்படும்.

காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகம் ரூ.20 லட்சம் செலவில் புதுப்பிக்கப்படும். பள்ளிகளில்மாணவ, மாணவியருக்கு இருதய நோய் குறித்த மருத்துவ சோதனைகள் நடத்தப்படும். நோய் பாதிப்பு உள்ள மாணவர்களுக்குஉரிய சிகிச்சையும் அளிக்கப்படும்.

கண் தானம், உடல் தானத்தை ஊக்குவிக்க தான மையங்கள் அதிக அளவில் அமைக்கப்படும். உயிர் காக்கும் மருந்துகளை அரசுமருத்துவமனைகளில் குறைந்த விலையில் விற்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார் அமைச்சர் செம்மலை.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+