ஜெயாவுக்கு தெம்பு இருந்தால், திராணி இருந்தால்... திமுக சவால்
சென்னை:
திமுக ஆட்சிக் காலத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டியதில் ஊழல் நடந்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதாகூறியதைக் கண்டித்து சட்டசபையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபைக்கு புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பாக அவையின் 110ஆம் விதியின் கீழ் சிலஅறிவுப்புகளை ஜெயலலிதா வெளியிட்டார்.
கடந்த 1975ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் தமிழக சட்டசபை வளாகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகைகட்டப்பட்டதில் பெரும் ஊழல்கள் நடந்தது, தரமற்ற அந்தக் கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும்ஜெயலலிதா அப்போது குறிப்பிட்டார்.
இதற்கு திமுக எம்.எல்.ஏக்கள் கடுமையான ஆட்சேபம் தெரிவித்தனர். இது தொடர்பாக உடனடியாக சட்டசபையில்விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், சபாநாயகர் காளிமுத்து அவர்களுக்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டார். இதைத் தொடர்ந்து அதிமுகஅரசை எதிர்த்து கோஷங்கள் எழுப்பியவாறே திமுகவினர் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
வெளியே வந்த பின்னர் நிருபர்களிடம் சட்டசபை திமுக துணைத் தலைவர் துரைமுருகன் கூறுகையில்,
அவை விதி எண் 110ன் கீழ் சட்டசபையினுள் எதை வேண்டுமானாலும் பேசலாம், அதை யாரும் தட்டிக் கேட்கமுடியாது, வழக்குத் தொடர முடியாது என்பதால்தான் ஜெயலலிதா திமுகவைப் பற்றி இப்படி அபாண்டமாகபேசியுள்ளார்.
நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டப்பட்டு 27 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை எந்தக் கொம்பனாவது, எந்தக்கட்சிக்காரனாவது இதில் ஊழல் செய்தது என்று சொல்லியிருக்கிறானா? இல்லையே.
ஆனால் ஜெயலலிதா சட்டசபையின் 110ம் விதியின் பின்னே பதுங்கிக் கொண்டு அவையில் வைத்துதான் இதைப்பேசியுள்ளார். அவருக்குத் தைரியம் இருந்தால், தெம்பு இருந்தால், திராணி இருந்தால் வெளியே வந்து திமுகமீதான இந்த ஊழல் புகார் குறித்து பேசச் சொல்லுங்கள், பார்ப்போம்.
ராணி மேரிக் கல்லூரியை இடித்து விட்டு அங்கே புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டப் போவதாக அரசுகூறுகிறது.
ஆனால் எவ்வளவு செலவில் அந்தக் கட்டடத்தைக் கட்டப் போகிறார்கள்? "எஸ்டிமேட்" போட்டு விட்டார்களாஎன்று தெரியவில்லை.
இந்த கட்டடப் பணியில் எத்தனை கோடி கமிஷன் "அடிக்கப்" போகிறார்களோ தெரியவில்லை என்றார்.
ஜெயலலிதாவை துரைமுருகன் நேரடியாக இப்படித் தாக்கி பேசி இருப்பதால் அவரது வீட்டில் விரைவில்லஞ்ச-ஒழிப்புப் போலீஸ் ரெய்ட் நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
-->












Click it and Unblock the Notifications