இந்திய போர் விமானம் விழுந்து 4 பேர் சாவு: விமானி தப்பினார்
லூதியானா:
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக்-23 ரக போர் விமானம் இன்று தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் ஒரு வீடுநொறுங்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இன்னொரு குழந்தையும் இடிபாடுகளில் சிக்கியுள்ளது. ஆனால்,பாராசூட் மூலம் விமானி பத்திரமாக தரையிறங்கிவிட்டார்.
பஞ்சாப் மாநிலம் பக்வாரா மாவட்டத்தில் உள்ள ஹல்வாரா விமான தளத்தில் இருந்து இன்று காலை 10.25 மணிக்கு இந்தப் போர்விமானம் புறப்பட்டது. பிளைட் லெப்டினன்ட் கில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென விமான என்ஜினில் தீப்பிடித்துக் கொணடது.
பின்னர் தரையை நோக்கி விமானம் பாயந்தது. இதையடுத்து விமானி கில் பாராசூட் மூலம் வெளியில் குதித்தார். அந்த விமானம்முல்லாபூர் தாக்கா என்ற கிராமத்தில் வீடுகளின் மீது மோதி வெடித்தது. இதில் பல வீடுகள் உடைந்து நொறுங்கின. இதில் ஒரேகுடும்பத்தை2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இதில் ஒருவர் கர்ப்பிணி ஆவார். மேலும் ஒரு குழந்தை இடிபாடுகளில்சிக்கியுள்ளது. அதன் நிலை என்ன என்று தெரியவில்லை.
இடிபாடுகளை அகற்றி குழந்தையை மீட்கும் பணி நடந்து வருகிறது. விமானம் விழுந்ததில் பல வீடுகளில் தீப் பிடித்துக்கொண்டது. இதையடுத்து லூதியானாவில் இருந்து பல தீயணைப்பு வண்டிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நெடுநேரம்போராடி தீயை அணைத்தன.
விமானப் படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். விபத்து குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.விமானத்தின் பிளாக் பாக்ஸ் மீட்கப்பட்டுவிட்டது.












Click it and Unblock the Notifications