இந்தியாவுக்கும் பரவியது "சார்ஸ்" நோய்
போபால்:
உலகையே அச்சுறுத்தி வரும் "சார்ஸ்" நோய் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில்இந்நோயால் தாக்கப்பட்ட ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
ராஜ்கார் மாவட்டத்தைச் சேர்ந்த புருஷோத்தம் என்ற இளைஞருக்குத்தான் "சார்ஸ்" நோய் இருப்பதாகக்கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு டாக்டர்கள் வெகு கவனத்துடன் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரைத் தனிவார்டுக்கு மாற்றவும் டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.
மேலும் அவரிடமிருந்து வேறு யாருக்கும் பரவி விடாதவாறும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்எடுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே "சார்ஸ்" நோயைக் கண்டறிவதற்கான சிறப்பு மருத்துவ வசதிகளை ஜெர்மனியிலிருந்து கொண்டு வரமத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரில் 5 பேர் பலி:
"சார்ஸ்" நோய்க்கு சிங்கப்பூரில் மட்டும் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக உலகையே அச்சுறுத்தி வரும் "சார்ஸ்" நோய் சீனாவில்தான் தோன்றியதாகக்கருதப்படுகிறது.
இதையடுத்து இந்த நோய் எப்படித் தோன்றியது என்பது குறித்து ஆராய்வதற்காக உலக சுகாதார அமைப்பைச்சேர்ந்த மருத்துவர்கள் குழு சீனாவுக்கு விரைந்துள்ளது.
சீனா மற்றும் ஹாங்காங்கில் இதுவரை 62 பேர் "சார்ஸ்" நோய் தாக்கி உயிரிழந்துள்ளனர். ஹாங்காங்கில் மட்டும் 7பேர் இறந்துள்ளனர்.
உலகம் முழுவதும் "சார்ஸ்" நோய் காரணமாக இதுவரை 75க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
சீன இந்தியர்களுக்கு அறிவுரை:
இந்நிலையில் சீனாவில் உள்ள இந்தியர்கள் "சார்ஸ்" நோய் தாக்கிவிடாமல் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும்என்று இந்திய அரசு அவர்களை அறிவுறுத்தியுள்ளது.
சீனா மற்றும் ஹாங்காங்கில் உள்ள இந்தியர்கள் யாருக்கும் இதுவரை "சார்ஸ்" நோய் தாக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
கால்பந்து போட்டி ஒத்திவைப்பு:
இதற்கிடையே "சார்ஸ்" நோய் பீதி காரணமாக ஆசிய கால்பந்து போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வரும் 17ம் தேதி தாய்லாந்தில் தொடங்கவிருந்த இந்தப் போட்டிகள் மறு தேதி குறிப்பிடப்படாமல்ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தாய்லாந்து நாட்டிலும் "சார்ஸ்" நோயால் தாக்கப்பட்ட மக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications