கடும் வெயிலில் சுருண்டு விழும் அமெரிக்க வீரர்கள்
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்:
ஈராக்கில் வெப்ப நிலை மிகவும் அதிகரித்து வருவதால் அமெரிக்க- பிரிட்டிஷ் வீரர்கள் படாதபாடுபட்டு வருகின்றனர். பலவீரர்கள் வெப்பம் தாங்காமல் சன்-ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு சுருண்டு விழுந்தனர்.
இதற்கிடையே அமெரிக்க டாங்குகள் மீது அமெரிக்க பீரங்கிப் படைகள் நடத்திய தவறான தாக்குதலில் 2 வீரர்கள்கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். பாக்தாதின் தென பகுதியில் இச் சம்பவம் நடந்தது.
ஈராக்கில் வெப்ப நிலை 40 டிகிரி செல்சியசை எட்டி வருகிறது. ஏப்ரல்- மே மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும் என்றுதெரிகிறது.
-->












Click it and Unblock the Notifications