அமெரிக்கப் படைகளை கொல்ல பெண் தற்கொலை படைகள் தயார்
பாக்தாத்:
அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்த பெண் தற்கொலைப் படைகளும் தயாராகி வருகின்றன.
அதே போல நேற்று வட ஈராக்கில் கார் குண்டு வெடித்து 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு 2 பெண்தற்கொலைப் படையினர் தான் காரணம் என ஈராக் அறிவித்துள்ளது. கொல்லப்பட்ட அந்தப் பெண்களின்பெயர்கள் நுஷா மஜல்லி அல்- ஷம்மாரி, விதாத் ஜமீல் அல்-துலேமி என்றும் தெரியவந்துள்ளது. இதில் ஒருபெண் கர்ப்பிணியாவார்.
இதற்கிடையே ஈராக் போரில் உயிர் நீத்த பொது மக்கள் மற்றும் வீரர்களின் குடும்பங்களுக்கு தாராளமானநிதியுதவி வழங்குமாறு அதிபர் சதாம் ஹூசேன் உத்தரவிட்டுள்ளதாக துணை அதிபர் தாகா யாசின் ரமதான்தெரிவித்தார்.
அமெரிக்க குண்டு வீச்சில் வீடுகள் இடிந்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிதியுதவி தர சதாம் உத்தரவிட்டுள்ளார்.இதுவரை இந்தப் போரில் 844 அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கத்து.
இதற்கிடையே சதாமைக் கண்டுபிடிப்பதைவிட ஈராக்கிடம் உள்ள பேரழிவு ஆயுதங்களைக் கண்டுபிடிப்பது தான்தங்களுடைய முக்கிய குறிக்கோள் என அமெரிக்கப் படைகள் கூறியுள்ளன. இதுவரை இந்த ஆயுதங்கள் எதையும்அமெரிக்கப் படைகள் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆயுதங்கள் இருப்பதாகக் கூறித்தான் ஈராக்கை அமெரிக்கா தாக்கி வருகிறது.
ஈராக்கில் இந்த ஆயுதங்கள் சிக்காவிட்டால், அமெரிக்கப் படைகளே இந்த ஆயுதங்களை அங்கு வைத்துவிட்டுஅவை ஈராக்குக்குச் சொந்தமானவை என பொய் சொன்னாலும் ஆச்சரியப்பட முடியாது என ரஷ்யவெளியுறவுத்துறை அமைச்சர் இகார் இவானோவ் கூறியுள்ளார். இவர் இந்தப் போரை ரஷ்ய அதிபர் புடினை விடமிகக் கடுமையாகக் கண்டித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications