மும்மை விமான நிலையத்தில் சார்ஸ் சோதனை
மும்பை:
மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கும் வெளிநாட்டுப் பயணிகள் அனைவரிடமும் சார்ஸ் (Severe AcuteRespiratory Syndrome -SARS) நோய் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்காக மும்பை சர்வதேச விமான நிலையத்தில் 2 சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. நோயால்பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களைத் தனிமைப்படுத்தவும் உடனடியாக உரிய சிகிச்சையைஆரம்பிக்கவும் தனி மருத்துவ அறையும் அமைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை வி.என்.தேசாய் மருத்துவமனையில் சேர்த்து சிறப்பு அளிக்கவும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு, மும்பை மாநகராட்சி ஆகியவற்றுடன் இணைந்து மாநில அரசு இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
சார்ஸ் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும் விமானங்கள் அனைத்திலும் வைரஸ் எதிர்த்து மருந்துகளும்தெளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே சிங்கப்பூரில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்த வண்ணம்உள்ளது. தினமும் இந் நோயால் பாதிக்கப்பட்ட 3 அல்லது 4 பேர் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications