கல்லூரி இடிப்பும் வாஸ்துவின் விளையாட்டும் !
சென்னை:
ராணி மேரிக் கல்லூரியைர் காப்பாற்ற பல தரப்பினரின் ஆதரவையும் பெறும் முயற்சிகளில் அக் கல்லூரிமாணவிகள் ஈடுபட்டுள்ளனர்.
இன்று அந்தக் கல்லூரி மாணவிகளின் ஒரு பிரிவினர் அண்ணா அறிவாயலத்துக்குச் சென்று திமுக தலைவர்கருணாநிதியைச் சந்தித்து தங்களது கல்லூரியைக் காக்க உதவுமாறு கேட்டுக் கொண்டனர்.
இந்தப் பிரச்சனையில் மாணவிகளுக்கு எல்லா வகையிலும் உதவுவதாக கருணாநிதி உறுதியளித்தார். அதேநேரத்தில் இதில் தானே நேரடியாக இறங்கினால், ஜெயலலிதா இதை அரசியல் பிரச்சனையாக திசைதிருப்பிவிடுவார் என்பதை சுட்டிக் காட்டிய கருணாநிதி அதைத் தவிர்க்க மாணவர்களே போராட்டத்தை முன் நின்றுநடத்துமாறு யோசனை கூறியதாகத் தெரிகிறது.
அதே போல ராணி மேரிக் கல்லூரி மாணவிகளுக்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. அக் கட்சியின்பொதுச் செயலாளர் பீட்டர் அல்போன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இப்போது தலைமைச் செயலக அலுவலங்கள் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை இன்னும் இரண்டுமாதங்களில் இடிந்துவிடும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு யார் சொன்னது என்று தெரியவில்லை. இது குறித்துஎந்தப் பொறியாளர் குழுவும் ஆய்வு நடத்தி அறிக்கை தராத நிலையில் இவராகவே கட்டடம் இடியப் போகிறதுஎன்றும் கூறுவதும்
அதற்காக மாணவிகள் படிக்கும் கல்லூரியை இடித்துவிட்டு தலைமைச் செயலகத்தைக் கட்டப் போவதாகச்சொல்வதும் சுத்த அபத்தமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
வாஸ்து படுத்தும் பாடு:
இந் நிலையில் கல்லூரியை இடிக்கச் சொன்னதே ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர் தான் என்று கூறப்படுகிறது.
தலைமைச் செயலகத்தை ராணி மேரிக் கல்லூரி இருக்கும் இடத்தில் கட்டினால் உங்களை யாரும் அசைக்கமுடியாது என அந்த ஜோதிடர் தான் யோசனை கூறியதாகத் தெரிகிறது.
இவர் தான் கண்ணகி சிலையை எடுக்கச் சொன்னவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிடரின் ஆலோசனைப்படிதான் மகாபலிபுரம் சாலை, மீனவர் குப்பம் ஆகியவை தலைமைச் செயலகம் கட்டுவதற்காகத் தேர்வுசெய்யப்பட்டன.
ஆனால், அந்த இடங்கள் ஒத்து வராமல் போய்விட்டதால் ஜோதிடரின் மூன்றாவது தேர்வு தான் ராணி மேரிக்கல்லூரி என்று கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications