உயர் ஜாதியினர் மிரட்டல்: கிராமத்தையே காலி செய்த தலித்கள்
திண்டுக்கல்:
தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டதால் பீதியடைந்து திண்டுக்கல் மாவட்டம்புன்னைப்பட்டி என்ற கிராமத்தில் வசிக்கும் தலித் மக்கள் அனைவரும் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டனர்.
நத்தம்அருகேஉள்ள புன்னைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தலித் வகுப்பைச் சேர்ந்த விஸ்வநாதன்என்பவர் கடந்த மார்ச் 19ம் தேதி பிற சமூகத்தினரால் கொலை செய்யப்பட்டார்.
இதனால் அந்தக் கிராமத்தில் வசிக்கும் தலித் மக்கள் அனைவரும் பீதியடைந்தனர்.
இதையடுத்து ஒவ்வொருவராக அந்த கிராமத்திலிருந்து இடம் பெயர்ந்து வேறு பகுதிகளுக்குச்சென்று விட்டனர்.
இந்த தகவல் சமீபத்தில் புன்னைப்பட்டி கிராமத்திற்குச் சென்ற பல்வேறு தலித் அமைப்புகளின்விசாரணைக் குழுக்கள் நடத்திய விசாரணையின்போது தெரிய வந்துள்ளது.
தலித் மக்கள் நிம்மதியாகவும் பயமின்றியும் வாழ வகை செய்ய வேண்டும் என்று மாவட்டநிர்வாகத்தை இந்த அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன.
-->


Click it and Unblock the Notifications
