ஈராக் போருக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: நாகர்கோவிலில் பயங்கரம்
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் ஈராக் போருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில்2 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஈராக்கில் அமெரிக்கா தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம்நாகர்கோவிலில் நேற்று மாலை போராட்டம் நடத்தியது.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மற்றும்பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் ஆகியோரின் கொடும்பாவிகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எரிக்க முயன்றனர்.
ஆனால் போலீசார் அதைத் தடுத்தனர். இதையடுத்து பெட்ரோல் நிரப்பப்பட்ட ஒரு பாட்டிலைகொடும்பாவியினுள் வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கொளுத்தினர்.
மேலும் போலீசார் மீதும் சிலர் கற்களை வீசி எறிந்தனர். இதனால் ஆத்திரமடைந்த போலீசார்போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர்.
போராட்டக்காரர்களும் பதிலடித் தாக்குதலில் ஈடுபடவே அங்கு பயங்கர வன்முறை வெடித்தது.இதையடுத்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிதறி ஓட ஆரம்பித்தனர். ஆனாலும்போலீசார் அவர்களை விடாமல் விரட்டி விரட்டி அடித்தனர்.
இந்த வன்முறையில் ஒரு போலீஸ்காரர் உள்பட இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக 32 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தக் களேபரத்தால் அப்பகுதி முழுவதும் போர்க்களமாகக் காட்சி அளித்தது.
எழுத்தாளர்கள் போராட்டம்:
இதற்கிடையே ஈராக் போரைக் கண்டித்து சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு முற்போக்குஎழுத்தாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டம் நடந்தது.
பல்வேறு கட்சியினரும் இதில் கலந்து கொண்டனர். திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழிஉள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகள் பங்கேற்ற இந்தக் கூட்டம்மற்றும் ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்காவின் ஆதிக்க மனப்பான்மையை எதிர்த்துகோஷமிடப்பட்டது. ஏராளமான பொதுமக்களும் இதில் பங்கேற்றனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications