பெரியகுளத்தில் பிரபல கைதியை தப்ப விட்ட 2 போலீஸார் கைது

Subscribe to Oneindia Tamil

பெரியகுளம்:

நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல கைதி புல்லட் நாகராஜன் என்பவனைத்தப்ப விட்ட 2 போலீசார் கைது செய்யப்பட்டனர்.

பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த புல்லட் நாகராஜன் அப்பகுதியில்பிரபல ரவுடி ஆவான். மதுரை, தேனி, பெரியகுளம் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திருட்டுவழக்குகளில் இவன் தொடர்புடையவன்.

சமீபத்தில் நாகராஜன் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். இந்நிலையில்விசாரணைக்காக பெரியகுளம் நீதிமன்றத்தில் அவன் ஆஜர்படுத்தப்பட்டான்.

நாகராஜனைத் தவிர அவனுடைய கூட்டாளிகளான முருகானந்தம், சடையாண்டி ஆகியோரும்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மூவருக்கும் பாதுகாப்பாக சரவணன் மற்றும் சண்முகம் ஆகியஇரு ஆயுதப் படைக் காவலர்கள் வந்திருந்தனர்.

விசாரணை முடிந்த பின் பெரியகுளம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக அவர்கள் காத்துக்கொண்டிருந்தனர். அப்போது தன் தாயைப் பார்க்க வேண்டும் என்று போலீசாரிடம் நாகராஜன்கேட்டுள்ளான்.

இதையடுத்து சண்முகம் மட்டும் நாகராஜனுக்குக் காவலாக அவனுடன் அவன் வீட்டிற்குக்கிளம்பினார். ஆனால் வழியிலேயே அவரை ஏமாற்றி விட்டு நாகராஜன் தப்பிச் சென்று விட்டான்.

இது தொடர்பாக ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்துபணியில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி சண்முகமும் சரவணனும் கைது செய்யப்பட்டனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+