ஸ்டாலின் கைதை எதிர்த்து ஈரோட்டில் பஸ் எரிப்பு: போராட்டத்தை நிறுத்த கருணாநிதி உத்தரவு
ஈரோடு:
ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஈரோட்டில் திமுகவினர் அரசு பஸ்யை தீயிட்டு எரித்தனர். இதுதொடர்பாக 18 திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தமிழகம் முழுவதும் மூன்றாவது நாளாக இன்றும் ஆங்காங்கேதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று நள்ளிரவு ஈரோடு குட்ஷெட் ரோட்டில் டிப்போவுக்குத்திரும்பிக் கொண்டிருந்த ஒரு அரசு பஸ்ஸை திமுகவினர் தடுத்து நிறுத்தினர்.
டிரைவரையும் கண்டக்டரையும் இறங்கச் சொல்லி மிரட்டினர். பஸ்ஸை விட்டுவிடுமாறு கூறிய அவர்களை அடித்துகீழே போட்டனர். பின்னர் பஸ் மீது பெட்ரோலை ஊற்றிய திமுக தொண்டர்கள் அதற்குத் தீ வைத்தனர்.
இதில் அந்த பஸ் முழுமையாக எரிந்து நாசமானது. சம்பவம் அறிந்த போலீசார் விரைந்து வந்தனர். திமுகவினர்தாக்குதலில் காயமடைந்த டிரைவரும் கண்டக்டரும் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீயணைப்புப்படையினர் வருவதற்குள் பஸ் எரிந்து எலும்புக் கூடாகிவிட்டது.
இச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறி 18 திமுக தொண்டர்ளை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவர்தேடப்பட்டு வருகிறார்.
கடலூரில் மாஜி அமைச்சர் கைது:
இதற்கிடையே கடலூரில் போராட்டத்தில் ஈடுபட்டு முதல்வர் ஜெயலலிதாவின் கொடும்பாவியை எரித்த முன்னாள்அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும் 100 திமுகவினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டாவது நாளாக போராட்டம் நடத்திய இவர்கள் போலீசாரை கொன்றுவிடுவேன் மிரட்டியதாகவும்,கடைகளை மூடச் சொல்லி கல் வீசியதாகவும், பஸ்களை சேதப்படுத்தியதாகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்களைக் கைது செய்த போலீசார் கடலூர் சிறைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு இடம் இல்லாததால்திருச்சி சிறைக்குக் கொண்டு செல்வதாக போலீசார் அறிவித்தனர். ஆனால், அதை திமுக தொண்டர்கள்ஏற்கவில்லை. போலீசாருக்கு எதிராக சிறை வாசலிலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நெடுநேரம் கழித்து அவர்களை கடலூர் சிறையிலேயே போலீசார் அடைத்தனர்.
திண்டுக்கல்லில்...
அதே போல திண்டுக்கல்லிலும் ஜெயலலிதாவின் கொடும்பாவியை எரித்ததாக இன்று காலை 50 திமுகவினர் கைதுசெய்யப்பட்டனர். இங்கு திமுக தொண்டர்கள் சாலை மறியல் போராட்டமும் நடத்தினர்.
போராட்டம் வேண்டாம்: கருணாநிதி
இந் நிலையில் ஸ்டாலின் கைதை கண்டித்து பொது மக்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் வகையில் எந்தப்போராட்டத்தையும் நடத்த வேண்டாம் எனவும், திமுக தலைமைக் கழகத்திடமிருந்து உத்தரவு வரும் வரை யாரும்எநத்ப் போராட்டத்தையும் நடத்தக் கூடாது என்றும் திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில்,ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்துதமிழகம்முழுவதிலும் திமுக தொண்டர்கள் தாங்களே முன் வந்து போராடி கைதாகி வருவதைக்கேள்விப்படும்போது மனதிற்கு நிறைவாக உள்ளது.
இது பாராட்டத்தக்க விஷயம் தான். இருப்பினும் திமுக தொண்டர்கள் உடனடியாக தங்களது போராட்டத்தைநிறுத்திக் கொள்ள வேண்டும். அடுத்தகட்ட போராட்டம் குறித்து தலைமைக்கழகம் அறிவிக்கும். அதுவரை யாரும்மக்களை பாதிக்கும் போராட்டத்தில் இறங்க வேண்டாம்.
திமுக தனித்தோ அல்லது தோழமைக் கட்சிகளுடன் இணைந்தோ மாநில அளவில் அடுத்த கட்டப் போராட்டம்நடத்தும் என்று கூறியுள்ளார்.
போலீசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்:
இந் நிலையில் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டுள்ள வழக்கில் அவர்களைநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி கைதான எம்.எல்.ஏக்களில் ஒருவரான உசேனின் தந்தை அப்துல்காதர்சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ்கார்பஸ் (ஆட்கொணர் மனு) தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக விளக்கம் கேட்டு சென்னை காவல்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏப்ரல் 17ம்தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-->












Click it and Unblock the Notifications