கள்ள காதலனுடன் சேர்ந்து கணவனை துண்டு துண்டாய் வெட்டிய மனைவி
சென்னை:
சென்னை கோயம்பேடு பகுதியில் சாக்கடையில் துண்டு துண்டாகக் கண்டுபிடிக்கப்பட்ட பிணம் குறித்த துப்புதுலங்கியுள்ளது.
கள்ளக் காதல் கொண்ட மனைவியே கணவனை கொன்று, வெட்டித் துண்டாக்கி சாக்கடையில் போட்டுள்ளதுதெரிய வந்துள்ளது.
கோயம்பேடு அருகே சமீபத்தில் சாக்கடையில் இரண்டு மனிதக் கைகள் மிதந்தன. அருகிலேயேதலைவெட்டப்பட்ட பிணத்தின் முண்டமும் சாக்குப் பையில் கிடந்தது. கால்கள்கிடைக்கவில்லை.
இந்தக் கொலை தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது கொலையுண்ட நபரின்பெயர் சண்முகவேலு என்று தெரிய வந்தது. இதையடுத்து அவரது மனைவி சுமதியிடம் விசாரித்தபோது உண்மைதெரிந்தது.
தங்கவேலு என்பவருக்கும் சுமதிக்கும் இடையே கள்ளக் காதல் இருந்து வந்துள்ளது. இது குறித்துத் தெரிந்ததும்சுமதியை கணவர் சண்முகவேலு கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுமதி கள்ளக் காதலன்தங்கவேலுவுடன் சேர்ந்து கணவனைக் கொன்றுள்ளார்.
பின்னர் உடலை விறகு வெட்டுவது மாதிரி துண்டுத் துண்டாக வெட்டி கால்வாயில் வீசியுள்ளனர். கால்களைமட்டும் வேறிடத்தில் எறிந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்திற்குப் பின் பயந்து போன தங்கவேலு சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டுவிட்டார்.
இந்தத் தற்கொலையை விசாரித்தபோது தான் வெட்டிக் கிடந்த உடல் தொடர்பான விவரங்களும் போலீசாருக்குத்தெரியவந்தன.
தற்போது சுமதியை போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications