சார்ஸ் வைரஸ் ஒரு உயிரியல் ஆயுதம்: சீனாவே உருவாக்கியது

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்:

தெற்காசியாவை அச்சுறுத்தி வரும் சார்ஸ் நோய்க்குக் காரணமான வைரஸ், உயிரியல் ஆயுதத் தொழிற்சாலையில்இருந்து தான் வெளியாகி இருக்க வேண்டும் என ரஷ்ய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த வைரசே ஒரு உயிரியல் ஆயுதம் தான் எனவும் கூறியுள்ளனர். இந்த வைரஸை உருவாக்கியது யார், எந்தஆய்வகத்தில் இருந்து இது வெளியானது போன்ற விவரங்களை முதலில் வெளியிட மறுத்த ரஷ்ய விஞ்ஞானிகள்இப்போது உண்மைகளை வெளியிட்டுள்ளனர்.

சீனாவே உருவாக்கியது:

இந்த வைரஸை சீனா தான் உருவாக்கியதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர். இருவேறு வைரஸ்களைச்சேர்த்து இந்த உயிரியல் ஆயுத வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது என ரஷ்ய மருத்துவ அகாடமி கூறியுள்ளது.

அடையாளம் கணடுபிடிப்பு:

இதற்கிடையே இந்த நோயை உருவாக்கும் வைரஸை அமெரிக்க விஞ்ஞானிகள் அடையாளம்கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வைரஸ் சாதாரண காய்ச்சல், சளித் தொந்தரவு தரும் வைரசில் இருந்து தான் தோன்றியுள்ளதாக அமெரிக்கவிஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சாதாரண வைரசில் சில ஆர்.என்.ஏ. (ஜீன்கள் போன்றது) மாற்றங்கள் ஏற்பட்டுஅவை புதிய வகை வைரஸாக (mutant) உருவாக்கியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த ஜீன் மாற்றங்கள் தானாகவே வைரசில் தோன்றினவா அல்லது உயிரியல் ஆயுத ஆய்வகங்ளில் யாராவதுஇந்த மாற்றத்தை செயற்கையாக உருவாக்கினரா என்று தெரியவில்லை எனவும் அமெரிக்க விஞ்ஞானிகள்கூறியுள்ளனர்.

மங்கோலியாவுக்கு பரவியது:

இதற்கிடையே சார்ஸ் நோய் சீனாவில் மேலும் பலரைக் கொன்று வருகிறது. இப்போது இந்த நோய்மங்கோலியாவுக்கும் பரவி விட்டது. சீனாவில் இதுவரை 80 பேர் இந்த நோயால் பலியாகியுள்ளனர். 1,300 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் 3 கண்டங்களில், 17 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளது. இந்த நோயால் இதுவரை 111 பேர்உயிரிழந்துள்ளதாகவும் 2,781 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலச சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

மூச்சுத்திணறல், காய்ச்சல், உடல் வலியை ஏற்படுத்தி இறுதியில் உயிரையும் மாய்க்கும் இந்த நோய் விலங்குகள்மூலம் பரவ வாய்ப்பில்லை எனவும் கூறியுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+