சதாமின் நெருங்கிய விஞ்ஞானி அமெரிக்காவிடம் சரண்
பாக்தாத்:
சதாம் ஹூசேனின் நெருங்கிய கூட்டாளியும் விஞ்ஞானியுமான ஜெனரல் அமிர் அல் சாடி என்பவர்அமெரிக்கப் படையினரிடம் சரணடைந்தார்.
மேலும் சதாம் இப்போது எங்கே இருக்கிறார் என்பது குறித்து தனக்குத் தெரியாது என்றும் அவர்கூறினார்.
பாக்தாதை அமெரிக்கப் படைகள் தாக்கிக் கொண்டிருந்தபோது அங்குள்ள தன் வீட்டிலேயேதான்அவர் இருந்து கொண்டிருந்தார். சரணடைந்த அமிர் பின்னர் அமெரிக்க ராணுவ ஜீப் ஒன்றில்அழைத்துச் செல்லப்பட்டார்.
இதற்கிடையே அமெரிக்க, பிரிட்டிஷ் படையினரால் கைப்பற்றப்பட்ட பாக்தாத், மொசூர், பாஸ்ரா,கிர்குக் உள்ளிட்ட நகர்களில் கொள்ளை, வழிப்பறி, சூறையாடல் போன்ற சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.
இதைத் தடுப்பதற்காக ஈராக் போலீசாருடன் சேர்ந்து கூட்டுக் காவல் துறையை அமைத்து ரோந்துப்பணிகளைத் தீவிரப்படுத்தும் முயற்சியில் அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள் இறங்கியுள்ளன.
-->












Click it and Unblock the Notifications