பெளர்ணமி கிரி வலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெளர்ணமி கிரி வலத்தை முன்னிட்டு சென்னை தாம்பரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு ஏப்ரல்16ம் தேதி சிறப்பு ரயில்கள் விடப்படுகின்றன.
அன்று மாலை 3.30 மணிக்கு தாம்பரத்திலிருந்து சிறப்பு ரயில் கிளம்பும். இரவு 9 மணியளவில்திருவண்ணாமலை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் 17ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு கிளம்பி காலை 8.40 மணிக்கு தாம்பரம்வந்தடையும்.
செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலூர் ஆகியநிலையங்களில் இந்தச் சிறப்பு ரயில் நின்று செல்லும்.
தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications