கோபால் மீது பொடா: வாஜ்பாய்- அத்வானி தலையிட வைகோ கோரிக்கை
சென்னை:
நக்கீரன் கோபாலை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதன் மூலம் நாட்டின் பத்திரிக்கை சுதந்திரத்தில்ஜெயலலிதா கை வைத்துள்ளார். உடனே ஜெயலலிதாவின் இந்த செயல்களை மத்திய அரசு தடுத்து நிறுத்தவேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தந்திஅனுப்பியுள்ளார்.
இன்று கடலூர் சிறையில் தன்னைச் சந்தித்த மதிமுகவின் அவைத் தலைவர் எல்.கணேசன் மூலம் வைகோவெளியிட்ட அறிக்கையில்,
பொடா சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தபோதே அரசியல் எதிரிகளோடு, தவறைச் சுட்டிக் காட்டும்பத்திரிக்கையாளர்கள் மீதும் இச் சட்டம் ஆட்சியாளர்களால் தவறாகப் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.குறிப்பாக பத்திரிக்கை சுதந்திரத்தைப் பறிக்கும் பொடா சட்டத்தின் 8வது பிரிவுக்கு நான் உள்பட பல கூட்டணிக்கட்சித் தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவித்தோம்.
இந் நிலையில் தான் ஜெயலலிதா அரசின் அக்கரமங்களை, ஊழல்களை தொடர்ந்து அச்சமின்றி துணிந்து நக்கீரன்எழுதி வருகிறது. இதை சகித்துக் கொள்ள முடியாத ஆத்திர வெறி கொண்ட ஜெயலலிதா அந்த இதன் ஆசிரியர்கோபாலை தனது போலீஸ் பரிவாரங்களை ஏவியுள்ளார்.
அதிரடிப்படை உளவாளியின் சாவுக்கு கோபால் தான் காரணம் என்று கொடும் பொய்ப் பழியை சுமத்தியுள்ளார்.ஜெயலலிதாவின் அக்கரமங்களைப் பார்க்கும் போது ஹிட்லரும் கோயாபெல்சும் சேர்ந்து மறுபிறவிஎடுத்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது.
கோபாலை பொடா சட்டத்தின் கீழ் சிறை தள்ள ஜெயலலிதா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அனைத்துஜனநாயக சக்திகளும் எதிர்த்துப் போராட முன்வர வேண்டும். இந்த விஷயத்தில் பிரதமர் வாஜ்பாயும் துணைப்பிரதமர் அத்வானியும் தலையிட வேண்டும். இது குறித்து சிறையிலிருந்து அவர்களுக்கு தந்தி அனுப்பியுள்ளேன்.
இவ்வாறு வைகோவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications