சென்னையில் மீனவர்கள் இடையே பயங்கர கோஷ்டி மோதல்
சென்னை:
சென்னையில் மீனவர்கள் இடையே ஏற்பட்ட பயங்கர கோஷ்டி மோதலில் 8 பேர் படுகாயம்அடைந்தனர்.
சென்னை-பெசன்ட் நகர் அருகே உள்ள ஓடைக் குப்பம் பகுதியில் ராமநாத் மற்றும் ஜெயபால்ஆகிய ரவுடிகளுக்கு இடையே அடிக்கடி கடும் மோதல் ஏற்படும்.
ஒவ்வொரு முறையும் இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் அரிவாள், கத்தி, வேல், வாள், ஈட்டி போன்றபயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொள்வது வழக்கம்.
இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் ராமநாத்தையும் ஜெயபாலையும் போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டாலும் அவர்களுடைய ஆதரவாளர்கள் அடிக்கடி மோதிக்கொண்டிருந்தனர். இன்றும் அதேபோல் இரு தரப்பினரும் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன்பயங்கரமாக மோதிக் கொண்டனர்.
ஒருவருக்கொருவர் சராமாரியாக அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கொண்டனர்அவர்கள். இதனால் ஓடைக் குப்பம் பகுதியே போர்க்களம் போல் காணப்பட்டது.
இச்சம்பவத்தில் 8 பேருக்குப் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது. அவர்கள் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாகஉள்ளது.
இதற்கிடையே இச்சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஓடைக் குப்பம் பகுதியில்பெரும் பதற்றம் எழுந்துள்ளதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications