லாரி ஸ்டிரைக்: சமையல் காஸ் தட்டுப்பாடு ஆரம்பம்
டெல்லி:
லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் 5வது நாளை எட்டியுள்ள நிலையில் தமிழகத்தில்பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து சமையல் எரிவாயுவுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அடிக்கடி டீசல் விலைகள் உயர்த்தப்படுவதைக் கண்டித்தும், ஒவ்வொரு மாநிலத்திலும்லாரிகளுக்கென தனித்தனியாக சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும் வேறு பலகோரிக்கைகளை வலியுறுத்தியும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர்.
வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் லாரி உரிமையாளர்களுடன் மத்திய அரசுநேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து லாரிகள் ஸ்டிரைக்தீவிரமாகியுள்ளது.
இந்த வேலைநிறுத்தம் காரணமாகத் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளது. காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள்கடுமையாக உயர்ந்துள்ளன.
இப்பிரச்சனைக்கு அரசு விரைந்து தீர்வு காணாவிட்டால் ஆங்காங்கே ஓடிக் கொண்டிருக்கும்சமையல் எரிவாயு லாரிகள் மற்றும் பால் லாரிகள் ஆகியவற்றையும் முடக்கிவைக்கப் போவதாகலாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பெட்ரோல் தட்டுப்பாடு:
கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கானவாகன உரிமையாளர்கள் பெட்ரோல், டீசல் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
இதையடுத்து வாகனத்தை வீட்டில் வைத்து விட்டு பலர் பஸ்களில் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
ஆனால் டீசல் தட்டுப்பாடு காரணமாக பல இடங்களில் பஸ்களின் எண்ணிக்கையும் வெகுவாகக்குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் பஸ்களில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஸ்டிரைக் தொடர்ந்து நீடித்தால் மக்கள்நடந்து போக வேண்டிய சூழ்நிலைதான் ஏற்படும் போல் உள்ளது.
இருந்தாலும் ஒருசில பெட்ரோல் பங்க்குகள் தாங்கள் பதுக்கி வைத்திருந்த பெட்ரோல், டீசலைவெளியே கொண்டுவர ஆரம்பித்துள்ளனர். சிறிது விலை அதிகமாகி இருந்தாலும் மக்கள் வேறுவழியின்றி தங்கள் வாகனங்களை நிரப்பிக் கொண்டு செல்கின்றனர்.
இதற்கிடையே லாரி உரிமையாளர்கள் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றுபெட்ரோலியத் துறை அமைச்சர் ராம் நாயக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயுவுக்கும் தட்டுப்பாடு:
இதற்கிடையே தமிழகத்தில் சமையல் எரிவாயு தட்டுப்பாடும் ஏற்படத் தொடங்கியுள்ளது. திருச்சி,மதுரை, பெருந்துறை, எண்ணூர், மயிலாடுதுறை, சேலம் ஆகிய ஆறு இடங்களில் இந்தியன் ஆயில்நிறுவனத்தின் காஸ் பாட்லிங் பிளான்ட் செயல்பட்டு வருகிறது.
இந்த இடங்களுக்கு சென்னை, மங்களூர், கொச்சி ஆகிய ஊர்களிலிருந்து புல்லட் லாரிகள் மூலம்காஸ் கொண்டுவரப்படுகிறது. பின்னர் பாட்லிங் பிளான்ட்கள் மூலம் சிலிண்டர்களில் காஸ்அடைக்கப்படுகிறது.
இதன் பின்னர்தான் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளுக்கும் காஸ் சிலிண்டர்கள் அனுப்பப்படும்.
ஆனால் லாரிகள் ஸ்டிரைக் காரணமாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள காஸ் பாட்லிங்பிளான்ட்டுகளுக்கு எரிவாயு வந்து சேரவில்லை. அதேபோல் அந்த இடங்களிலிருந்தும் காஸ்சிலிண்டர்கள் மற்ற இடங்களுக்கு அனுப்பப்படவில்லை.
இதனால் பாட்லிங் பிளான்ட்டுகளில் சுமார் 5 லட்சம் காஸ் சிலிண்டர்கள் தேங்கிக் கிடக்கின்றன.இதைத் தொடர்ந்து எரிவாயுக்காகப் பதிவு செய்து விட்டுக் காத்திருக்கும் பொதுமக்கள் கடும்பாதிப்படைந்துள்ளனர்.
வீட்டில் இருக்கும் காஸ் சிலிண்டரும் எப்போது காலியாகுமோ என்ற பயத்தில் ஆயிரக்கணக்கானமக்கள் பரிதவித்து வருகின்றனர். இதையடுத்து பல காஸ் ஏஜென்ஸி நிறுவனங்கள் சிலிண்டர்களைப்பதுக்கி வைக்க ஆரம்பித்துள்ளனர்.
இதனால் காஸ் சிலிண்டர்களின் விலைகள் கடுமையாக அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
துறைமுகங்களில்...
இதற்கிடையே சென்னை, தூத்துக்குடி போன்ற துறைமுகங்களிலும் ஏராளமான பொருட்கள் எடுத்துச்செல்லப்படாமல் தேங்கியுள்ளன.
சிமெண்ட் மூட்டைகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் துறைமுகங்களில் தேங்கிக் கிடக்கின்றன.
அதுபோல் நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து எந்தப் பொருட்களும் துறைமுகத்திற்கு லாரிகள் மூலம்வந்து சேராத காரணத்தால் ஏற்றுமதி வர்த்தகமும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.
காய்கறி வரத்து சீரானது:
இதற்கிடையே லாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட போதிலும் மார்க்கெட்டுகளுக்குக் காய்கறிகள் வந்துகொண்டுதான் உள்ளன.
பஸ்கள் மற்றும் டிராக்டர்கள் மூலம் "ப்ரெஷ்"சாக காய்கறிகள் வந்து இறங்கிக் கொண்டிருந்தாலும்அவற்றின் விலைகள் குறையவே இல்லை. அதே ஏறுமுகத்தில்தான் உள்ளன.
தொடர்ந்து காய்கறிகள் வந்து இறங்கினால்தான் ஓரளவு விலை குறையும் என்று தெரிகிறது.இருந்தாலும் காய்கறிகளை மொத்த வியாபாரிகளுக்கு சப்ளை செய்ய முடியாமல் விவசாயிகளும்திணறி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications