இந்திய சார்ஸ் நோயாளி முழு குணமடைந்தார்
பனாஜி:
சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட இந்தியர் பூரண குணமடைந்துவிட்டதால் அவரை மருத்துவமனையில் கோவாமருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்தனர்.
ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பயணம் செய்துவிட்டுத் திரும்பிய கோவாவைச் சேர்ந்த மெரைன்என்ஜினியர் பிரசீல் வார்தே (32) சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டார். இந்தியாவில் சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டமுதல் நோயாளி இவர் என்பதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அவருக்கு சார்ஸ் இருப்பதை புனே வைராலஜி ஆய்வு மையம் நேற்று முன் தினம் இரவு தான் உறுதி செய்தது.ஆனால், அதற்கு முன்னதாகவே அவரது உடலில் சார்ஸ் நோய்க்கான அறிகுறிகள் குறைய ஆரம்பித்துவிட்டன.
இப்போது அவர் முழுமையாகவே உடல் நலம் தேறிவிட்டார் என கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள்கூறியுள்ளனர். இதையடுத்து அவரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய மத்திய அரசிடம் கோவாமுதல்வர் மனோகர் பாரிக்கர் அனுமதி கோரினார்.
இதையடுத்து மத்திய டாக்டர்கள் குழுவினர் பிரசீல் வார்தேவை சோதனையிட்டனர். அவர் பூரண குணம்அடைந்துவிட்டதாக மத்திய நலத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் அறிக்கை அளித்தனர். இதைத் தொடர்ந்துஅவரை டிஸ்சார்ஜ் செய்ய மாநில அரசுக்கு சுஷ்மா அனுமதி வழங்கினார்.
இதையடுத்து அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அடுத்த 12 நாட்களுக்கு வீட்டில் தனியே இருக்குமாறும்,யாரையும் சந்திக்க வேண்டாம் என்றும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாஸ்க் அணிந்தேஇருக்குமாறு அவரது வீட்டினருக்கும் கூறப்பட்டுள்ளது.
பிரசீல் வார்தே சார்சினால் பாதிக்கப்பட்டிருந்தபோது அவர் மும்பையிலும் கோவாவிலும் பலரைச் சந்தித்துள்ளார்.இதனால் அவர்களையும் அடையாளம் கண்டுபிடித்து தனிமைப்படுத்தி சார்ஸ் நோய் இருக்கிறதா என்பதை ஆய்வுசெய்யும் முயற்சிகளிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இந் நிலையில் பிரசீலுக்கு உண்மையிலேயே சார்ஸ் இருந்ததா என்பதிலும் சில சந்தேகங்கள் கிளப்படுகின்றன.புனே வைரஸ் ஆய்வு நிறுவனம் அமெரிக்காவில் இருந்து வாங்கிய கருவிகளைக் கொண்டு சோதனை நடத்தித்தான் அவருக்கு சார்ஸ் இருப்பதாக அறிவித்தது.
ஆனால், அங்கு நடத்தப்பட்ட ஆய்வு முறைகள் சரியானவையா என்பது தங்களுக்கு சந்தேகம் அளிப்பதாக உலகசுகாதார நிறுவனம் கூறியுள்ளது. மேலும் பிரசீலுக்கு சார்ஸ் நோய்க்கான மூச்சுத் திணறல் அறிகுறியேஏற்படவில்லை. இதனால் அவரை சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவராக உலக சுகாதார நிறுவனம் இன்னும்அறிவிக்கவில்லை.
இந்த சந்தேகங்களைப் போக்க மீண்டும் அவரது ரத்தம், சளி, யூரினில் சோதனைகள் நடத்த மத்திய அரசுஉத்தரவிட்டுள்ளது.
டெல்லி நோயாளி:
இதற்கிடையே சார்ஸ் போன்ற அறிகுறிகளுடன் டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட நியூசிலாந்து பயணிக்கு காய்ச்சல் குறைய ஆரம்பித்துவிட்டது. சிறிது மூச்சுத் திணறல் உள்ளது.இவரது சார்ஸ் சோதனை முடிவுகள் நாளை தான் கிடைக்கும் என்று மருத்துவமனை அறிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications