பெட்ரோல், பால், குடிநீர், காஸ் லாரிகளும் ஸ்டிரைக்!
சென்னை:
நாளை முதல் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் வினியோகம் செய்யும் கண்டெய்னர் லாரிகளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.
இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் நிலைஉருவாகியுள்ளது.
அகில இந்திய மோட்டர் காங்கிரஸ் துணைத் தலைவரான ஆசைத் தம்பி கூறுகையில், இதுவரை நாங்கள் நடத்தியபோராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. மேலும் அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தைப்பயன்படுத்தி எங்கள் போராட்டதை நசுக்கவும் மத்திய அரசு முயல்கிறது.
இதனால் பெட்ரோல், டீசல், பால், தண்ணீர் போன்றவற்றைக் கொண்டு செல்லும் அத்தியாவசிய லாரிகளையும்போராட்டத்தில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளோம். பொது மக்களுக்கு பிரச்சனை வரக் கூடாது என்பதற்காகஇதுவரை இந்த லாரிகளை இயக்கி வந்தோம். ஆனால், இனி இந்த லாரிகளையும் போராட்டத்தில்ஈடுபடுத்துவோம் என்றார்.
இந் நிலையில் தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்குத் தான் பெட்ரோல், டீசல் இருப்பு உள்ளதாக பெட்ரோல் பங்க்உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சங்கர் தெரிவித்துள்ளார்.
கண்டெய்னர் லாரிகள் போராட்டத்தில் இறங்கினால் திங்கள்கிழமையில் இருந்தே பெட்ரோல், டீசலுக்கு பெரும்தட்டுப்பாடு ஏற்பட ஆரம்பித்துவிடும் என அவர் எச்சரித்துள்ளார்.
அத்தியாவசிய லாரிகளும் போராட்டத்தில் இறங்கினால் பெட்ரோல், டீசல் தவிர பால், தண்ணீர் வினியோகமும்கூட பாதிக்கப்படலாம்.
தமிழகத்தில் இரு நாட்களுக்கு முன்பு தான் பெட்ரோல், டீசல் விற்பனை சீரானது. லாரிகள் ஸ்டிரைக்தொடங்கியவுடனே பெட்ரோல், டீசல் ஸ்டாக் இல்லை என்று பெட்ரோல் பங்குகளில் போர்டுகள்தொங்கவிடப்பட்டன.
பல பங்குகள் மூடப்பட்டன. இப்போது தான் நிலைமை சீரானது. இந் நிலையில் மீண்டும் பெட்ரோல், டீசல்தட்டுப்பாடு உருவாகப் போகிறது.
தூத்துக்குடியில் உப்பு தேக்கம்:
லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் செந்தாமரைக் குளம், புனையூர் உள்ளிட்டபகுதிகளிலும் தூத்துக்குடி மாவட்டத்திலும் சுமார் 20,000 டன் உப்பு தேங்கிக் கிடக்கிறது.
அதே போல இப் பகுதியில் தயாரிக்கப்பட்ட பல ஆயிரம் டன் எடையுள்ள கயிறுகளும் தேங்கிக் கிடப்பதால்இந்தத் தொழிலாளர்கள் சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications