சார்ஸ்: சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா விமானங்கள் ரத்து
டெல்லி:
சார்ஸ் நோய் பயம் காரணமாக சிங்கப்பூருக்கு விமானங்களை இயக்க இந்திய பைலட்கள் மறுத்து வருகின்றனர்.இதையடுத்து சிங்கப்பூருக்குச் செல்லும் விமானங்களை ஏர்- இந்தியா ரத்து செய்துள்ளது.
முதல் கட்டமாக டெல்லி- சிங்கப்பூர், ஹைதராபாத்- சிங்கப்பூர் இடையிலான சேவைகள் திங்கள்கிழமை முதல் ரத்துசெய்யப்படுகின்றன.
அதே போல சிங்கப்பூரில் இருந்து நீட்டிக்கப்படும் ஏர் இந்தியாவின் கோலாலம்பூர், ஜகார்த்தா விமானசேவைகளும் ரத்தாகின்றன.
இதனால் சிங்கப்பூருக்கு இந்தியாவில் இருந்து வாரம் 10 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட உள்ளது. இதுவரை14 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த 10 விமானங்களும் மும்பை மற்றும் சென்னையில் இருந்து மட்டுமேஇயக்கப்பட உள்ளன.
அதே போல இந்தியன் ஏர்லைன்சும் சிங்கப்பூர்- மும்பை, சிங்கப்பூர்- சென்னை விமானங்களை ரத்து செய்யஉள்ளதாகக் கூறப்படுகிறது.
சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்குக்கு விமானங்களை இயக்க பைலட்களும் இந்த விமானங்களில் பணியாற்றஏர்-ஹோஸ்டஸ்களும் மறுத்து வருகின்றனர். இதனால் விமான சேவைகளை ரத்து செய்ய வேண்டிய நிலைக்கு ஏர்இந்தியாவும், இந்தியன் ஏர்லைன்சும் தள்ளப்பட்டுள்ளன.
சீனாவில் புரளி:
இந் நிலையில் சிகரெட் குடித்தால் சார்ஸ் நோய் தாக்காது என்ற புரளி சீனாவிலும் ஹாங்காங்கிலும் பரவியுள்ளது.
இதனால் இந்த நாடுகளில் பலரும் தொடர்ந்து புகை பிடித்தவண்ணம் உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications