சிக்கன், மட்டன் விற்பனை அடியோடு பாதிப்பு
சென்னை:
லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தில் கோழிக் கறி, ஆட்டு இறைச்சி ஆகியவற்றுக்குக்கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளன.
லாரிகள் வேலைநிறுத்தம் 7வது நாளை எட்டியுள்ள நிலையில் காய்கறிகள் உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
மேலும் முட்டை, கறிக் கோழி (சிக்கன்), ஆட்டு இறைச்சி (மட்டன்) ஆகியவற்றுக்கும் கடும்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
விடுமுறை தினமாகிய ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஏராளமான மக்கள் சிக்கன், மட்டன்ஆகியவற்றைச் சமைத்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் இன்று சிக்கனோ மட்டனோ கிடைக்காமல்மக்கள் தவித்தனர்.
லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக ஒரு ஊரிலிருந்து வேறு ஊருக்கு சிக்கன், மட்டன் ஆகியவைகொண்டுசெல்லப்படுவது தடைபட்டுள்ளது.
இதனால் சிக்கன், மட்டன் கடைகளில் அவற்றுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும்அவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளன.
"வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் 80 முதல் 100 கிலோ வரை கறி விற்பனையாகும். ஆனால்இன்று 10 கிலோ விற்றாலே அது அதிகம்தான்" என்று ஒரு கறிக்கடை உரிமையாளர் கூறினார்.
இதற்கிடையே உரிய தீவனம் கிடைக்காமல் கோழிப் பண்ணைகளில் தினமும் 30,000 கறிக்கோழிகள் பரிதாபமாக இறந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
-->


Click it and Unblock the Notifications
