கொலை முயற்சி வழக்கில் ஸ்டாலினுக்கு ஜாமீன்
சென்னை:
போலீசாரைக் கொலை செய்ய முயற்சித்ததாக திமுக இளைஞரணிச் செயலாளர் ஸ்டாலின் மீது போடப்பட்டுள்ளஇன்னொரு வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ராணிமேரிக் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்தது, மாணவிகளைப் போராடத் தூண்டியது போன்ற வழக்குகளில்ஸ்டாலினுக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிவிட்டது. ஆனால், தன்னைக் கைது செய்ய வந்த போலீசாரைதிமுகவினரை வைத்து கொலை செய்ய முயன்றதாக வேளச்சேரி போலீசார் ஸ்டாலின் மீது இன்னொரு வழக்குப்போட்டனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஒரு மனுவை ஸ்டாலின் தாக்கல்செய்திருந்தார். தன்னைக் காவலில் வைக்க உத்தரவிட்ட சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் ஒரு மனு தாக்கல்செய்திருந்தார்.
இதில் சைதாப்பேட்டை நீதிமன்றம் அவரது மனுவை இன்று காலை நிராகரித்துவிட்டது. இந் நிலையில் முதன்மைசெசன்ஸ் நீதிமன்றத்தில் போடப்பட்ட ஜாமீன் மனுவும் இன்று காலை விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை முதன்மை அமர்வு நீதிபதி ஜெயக்குமார் விசாரித்தார். அப்போது பேசிய அரசு வழக்கறிஞர்கணேசன், போலீசாரைக் கொல்ல முயன்ற வழக்கில் ஸ்டாலின் இன்னும் கைது செய்யப்படவே இல்லை. அந்தவழக்கில் இன்று தான் அவர் நீதிமன்றத்திலேயே ஆஜர்படுத்தப்பட உள்ளார் என்றார்.
இதை ஆட்சேபித்த திமுக வழக்கறிஞர் பேசுகையில், போலீசாரைக் கொல்ல முயன்ற வழக்கில் கடந்த 10ம் தேதியேஸ்டாலினைக் கைது செய்துவிட்டதாக கடலூர் சிறையில் இருந்து ஸ்டாலினின் மனைவி துர்காவுக்கு போலீசார் தந்திஅனுப்பியுள்ளனர். நிலைமை அப்படி இருக்க அந்த வழக்கில் இன்னும் ஸ்டாலின் கைது செய்யப்படவே இல்லைஎன்று சொல்வது அப்பட்டமான பொய் என்றார்.
இதையடுத்து, இந்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பை இன்று மாலை வழங்குவதாக நீதிபதி அறிவித்தார். இன்று மாலைதீர்ப்பளித்த நீதிபதி, ஸ்டாலினை ஜாமீனில் விட உத்தரவிட்டார். அவருடன் சேர்த்து கைதான மேலும் 5 திமுகஎம்.எல்.ஏக்களுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், அவரை வரும் 5ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளதால் அவர்கள் விடுதலையாவது சாத்தியமா என்று உடனடியாத் தெரியவில்லை.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications