இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் ராஜினாமா
டெல்லி:
இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் ராபர்ட் பிளாக்வில் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்திய- அமெரிக்க உறவில் புதிய அத்தியாயத்தைத் துவக்கி வைத்தவர் பிளாக்வில் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த இரு ஆண்டுகளாக இந்தியத் தூதராக இருந்த அவர் இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவைஏற்படுத்தினார்.
பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாத்தை அவ்வப்போது நேருக்கு நேராக விமர்சித்து வந்தார். பிரதமர்வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி, அமைச்சர்கள் ஜஸ்வந்த் சிங், யஷவந்த் சின்ஹா, ஜார்ஜ் பெர்னாண்டஸ்ஆகியோருக்கு மிக நெருக்கமானவராக இருந்தார்.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சின் தனிப்பட்ட நண்பர்களில் ஒருவர் பிளாக்வில்
64 வயதான ராபர்ட் பிளாக்வில் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றத் திட்டமிட்டுள்ளார்.இதற்காகவே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில்,
ஹாவர்ட் பல்கலைக்கழகத்தின் ஜான் எப். கென்னடி ஸ்கூலில் பணிபுரியத் திட்டமிட்டுள்ளேன். எனது ராஜினாமாமுடிவை கடந்த ஜனவரியிலேயே அதிபர் புஷ்ஷிடம் தெரிவித்துவிட்டேன். இந்தியாவில் தூதராகப் பணியாற்றியதுஎன் வாழ்வில் மறக்க முடியாத காலகட்டமாகும். இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவு எதிர்காலத்தில் மேலும்வலுப்படும். மிக நல்ல எதிர்காலம் நமக்குக் காத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
பில் கிளின்டனின் காலத்தில் தூதராக இருந்த ரிச்சர்ட் செலஸ்டி, புஷ் அதிபரானவுடன் நீக்கப்பட்டார். அவருக்குப்பதிலாக தனது நண்பர் ராபர்ட் பிளாக்வில்லை இந்தியத் தூதராக புஷ் நியமித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications