சீனாவில் பெர்னாண்டஸ்: சிவப்புக் கம்பள வரவேற்பு
பெய்ஜிங்:
பெய்ஜிங் சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசுக்கு சீன அரசு சிவப்புக் கம்பள வரவேற்புஅளித்து கெளரவப்படுத்தியது. சீனாவுடன் நேருக்கு நேர் மோதிய மூத்த அமைச்சர் பெர்னாண்டஸ் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இரு ஆண்டுகளுக்கு முன் சீனா தான் இந்தியாவின் நம்பர் ஒன் எதிரி என்றும், சீனாவை மனதில் கொண்டு தான்அணுகுண்டு சோதனையே நடத்தப்படாடதாகவும் பெர்னாண்டஸ் கூறியிருந்தார். இதற்கு சீனா கடும் கண்டனம்தெரிவித்திருந்தது.
இதையடுத்து இந்திய- சீன உறவுகள் கொஞ்சம் கொஞ்சமாக சீரடைந்தன. ஆனாலும் அந் நாட்டுக்கு மூத்தஅமைச்சர் யாரும் செல்லவில்லை. இப்போது தான் முதன்முறையாக இந்தியாவின் மூத்த அமைச்சர் நீண்டகாலத்துக்குப் பின் சென்றுள்ளார்.
சார்ஸ் அச்சம் காரணமாக தனது பயணத்தை பெர்னாண்டஸ் ஒத்திவைப்பார் என சீனாவே எதிர்பார்த்தது. ஆனால்,திட்டமிட்டபடி தனது பயணத்தை பெர்னாண்டஸ் தொடங்கினார். இன்று பெய்ஜிங்கில் சீன ராணுவத்தலைமையகத்தில் அவருக்கு ராணுவ அணிவகுப்பும் சிவப்புக் கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.
பின்னர் முப்படைகளின் அணிவகுப்பும் தரப்பட்டது. பெர்னாண்ஸை சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாவ்காங்சுவான் வரவேற்று அழைத்துச் சென்றார்.
பின்னர் இரு நாட்டுக் குழுவினரும் உயர் மட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். பெர்னாண்டசின் வருகைக்குசீனா அதீத முக்கியத்துவம் அளிப்பதாக சாவ் தெரிவித்தார்.
இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்துவது, எல்லைப் பிரச்சனை குறித்தபேச்சுவார்த்தையை துரிதப்படுத்துவது, தெற்காசிய தீவிரவாதம், பாகிஸ்தான் விவகாரம், ஈராக் போர் ஆகியவைகுறித்து இரு நாட்டு அமைச்சர்களும் பேச்சு நடத்தினர். மேலும் பல சுற்றுப் பேச்சு தொடரும்.
பின்னர் பிரதமர் வென் ஜியாபோவை பெர்னாண்டஸ் சந்தித்தார். அப்போது இரு நாட்டு நல்லுறவை வலுப்படுத்தஇரு நாடுகளுமே முயற்சிக்க வேண்டும் என்று ஜியாபோ தெரிவித்தார். இரு மிகப் பெரிய நாடுகள் தலைமுறைதலைமுறையாக நட்புடன் தான் இருந்திருக்க வேண்டும். இருக்க வேண்டும் என்றார்.
கடந்த 1800 ஆண்டுகளாக இந்தியாவும் சீனாவும் 99.9 சதவீதம் நட்புறவுடன் தான் இருந்தன (சீன-இந்தியப்போரை அவர் மீதி 0.1 சதவீதத்தில் சேர்த்தார்). நம் இரு நாடுகளின் மக்கள் தொகையும் உலக மக்கள் தொகையில்பாதியைத் தொட்டுவிடும். எனவே, நம்மிடையே நட்புறவு அவசியம் என்றார்.
முன்னாள் அதிபரும் சீன ராணுவ கமிஷனின் தலைவருமான ஜியாங் ஜெமினுடனும் பெர்னாண்டஸ் பேச்சுநடத்தவுள்ளார். உலகின் மிகப் பெரிய ராணுவமான சீன ராணுவத் தளவாடங்களையும் பெர்னாண்டஸ்பார்வையிட உள்ளார். ஒரு வாரகாலம் அங்கு தங்கியிருக்கும் பெர்னாண்டசுடன் 16 பேர் கொண்ட உயர் மட்டக்குழு சென்றுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் பிரதமர் வாஜ்பாயும் சீனா செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications