லாரி ஏற்றி அதிகாரி கொலை: மணல் கொள்ளையர்கள் அட்டகாசம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே பாலாற்றில் மணல் திருடிய கும்பலைத் தடுத்த அதிகாரி லாரியால் ஏற்றிப்படுகொலை செய்யப்பட்டார்.
செங்கல்பட்டை அடுத்த பழைய சீவரத்தில் உள்ள பாலாற்று மணற்படுகையில் மணல் எடுக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தடையையும் மீறி மணல் திருட்டு இங்கு சர்வ சாதாரணமாகநடந்து வருகிறது.
கரை வேட்டிக் கும்பல்களும் ரெளடிகளும் சேர்ந்து கொண்டு இங்கு மணலைத் திருடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் தாசில்தார் ஜெயபால், ரெவின்யூ இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள்நேற்று அதிகாலை அப்பகுதியில் திடீர் சோதனையிடச் சென்றனர்.
அப்போது அங்கு ஒரு கும்பல் 10 லாரிகளில் மணலை ஏற்றிக் கொண்டிருந்தது. அதிகாரிகளைப்பார்த்ததும் அந்தக் கும்பல் லாரிகளில் ஏறித் தப்பிக்க முயன்றது. மேலும் அந்தக் கும்பலில் இருந்தசிலர் பயங்கர ஆயுதங்களுடன் அதிகாரிகளைத் தாக்கவும் முயற்சித்தனர்.
இந்நிலையில் படுகையிலிருந்து கிளம்பிய லாரிகள் ஒவ்வொன்றாகத் தப்பித்துக் கிளம்பிச் சென்றன.அவற்றில் ஒரு லாரியை சண்முகசுந்தரம் தடுக்க முயன்றார்.
ஆனால் அந்த லாரி நிற்காமல் அவர் மீது மோதி அவரைத் தூக்கி எறிந்து விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. மற்ற லாரிகளுடன் மணல் திருட்டுக் கும்பலும் தப்பிச் சென்று விட்டது.
லாரி மோதியதால் தூக்கி எறியப்பட்ட சண்முகசுந்தரம் படுகாயம் அடைந்தார். உடனே மற்றஅதிகாரிகள் அவரை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனால் செல்லும்வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
சண்முகசுந்தரத்திற்கு சுலோச்சனா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். மூத்த பெண்சாந்தினிக்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மணல் திருட்டுக் கும்பலையும்,சண்முகசுந்தரத்தைக் கொலை செய்த லாரி டிரைவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தமிழகம் முழுவதுமே முக்கிய கட்சிகளின் கரை வேட்டிகள் குறிப்பாக அதிமுகவினரும் திமுகவினரும்ரெளடிகளும் மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொது மக்களின்சொத்தான ஆற்று மணலைக் கொள்ளையடித்து அரைபாடி லாரிகளில் கொண்டு சென்று விற்றுகோடிகளைக் குவித்து வருகின்றனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications