2016ம் ஆண்டுக்குள் நதிகள் இணைக்கப்படும்
டெல்லி:
நாட்டின் முககிய நதிகளை இணைப்பது குறித்து நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளுடனும் மத்திய அரசுஆலோசனை நடத்தவுள்ளது.
சில நதிகள் இந்தியாவில் இருந்து இந்த நாடுகளுக்குள் பாய்வதால் அவர்களுடன் ஆலோசனை நடத்திவிடமத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக சுரேஷ் பிரபு தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உயர் மட்டக் குழு (task force) விரைவில் இந்தநாடுகளுடன் ஆலோசனை நடத்தும். இத் தகவலை நீர்வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சரண் சேத்தி இன்றுநாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் கூறுகையில்,
இமாயலத்தில் உருவாகும் நதிகளை இணைப்பது குறித்து நேபாளம், வங்கதேசம் தவிர பூடானுடனும் நாம்பேசியாக வேண்டும். வரும் ஜூலை மாதத்துக்குள் நதிகள் இணைப்பு தொடர்பான இரு முக்கிய செயல் திட்டங்கள்அறிவிக்கப்படும்.
நதிகள் இணைப்புக்கு ஆதரவு கோர மே அல்லது ஜூன் மாதத்தில் அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டமும்நடத்தப்படும்.
நதிகளை இணைப்பது தொடர்பான ஆய்வுப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 2005ம் ஆண்டு டிசம்பர் 31க்குள்இந்த ஆய்வு முடிவடைந்துவிடும். உடனே இணைப்புப் பணியும் ஆரம்பிக்கும். 2016ம் ஆண்டுக்குள் நதிகள்இணைக்கப்பட்டுவிடும் என்றார்.












Click it and Unblock the Notifications