நிபந்தனை ஜாமீனில் தொகாடியா விடுதலை

Subscribe to Oneindia Tamil

ஆஜ்மீர்:

மதக் கலவரத்தைத் தூண்ட முயன்றதாக தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்ட விஸ்வ இந்து பரிஷத் தலைவர்பிரவீன் தொகாடியாவுக்கு ஆஜ்மீர் நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

கடந்த 13ம் தேதி ஆஜ்மீரில் திரிசூலங்களை வினியோகித்து மதக் கலவரத்தை ஏற்படுத்த முயன்றபோது அவர்கைது செய்யப்பட்டார். உடனே ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து இரண்டாவது மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ரூ. 40,000 சொந்தஜாமீனிலும் ரூ. 20,000 ஒரு நபர் ஜாமீனிலும் அவரை விடுவித்தது. மேலும் திரிசூலங்களை வினியோகிப்பது,தடைச் சட்டத்தை மீறுவது போன்ற செயல்களை இனி செய்யக் கூடாது என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.

திரிசூல வினியோகம் தொடரும்:

இந் நிலையில் டெல்லியில் நிருபர்களிடம் பேசிய வி.எச்.பியின் துணைத் தலைவர் கிரிராஜ் கிசோர், திரிசூலவினியோகத்தை தொடர்வோம். இந்துக்களுக்கு எதிராக அரசு நடத்தும் ராஜஸ்தான் முதல்வர் அசோக்கெலோட்டுக்கு எதிராக பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்துவோம் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+