கேரட் கிடைக்கவில்லை.. கத்தரிக்கு வந்தது வாழ்வு
சென்னை:
லாரிகள் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து மலைப் பகுதிகளில் விளையும் காய்கறிகளின் வரத்துகுறைந்து விட்டதால் சாதாரண காய்கறிகளின் விற்பனை அதிகரித்துள்ளது.
லாரிகள் ஸ்டிரைக் காரணமாக பஸ்கள் மற்றும் டிராக்டர்களில் காய்கறிகள் வந்து இறங்கினாலும்அவற்றின் விலைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் உள்ளன.
இந்நிலையில் ஊட்டி போன்ற மலைப் பகுதிகளில் விளையும் கேரட், முள்ளங்கி உள்பட பல"இங்கிலீஷ்" காய்கறிகளின் வரத்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் குறைந்துள்ளது. இதனால் கத்தரிஉள்ளிட்ட மற்ற காய்கறிகளின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது.
மலைப் பகுதிகளிலிருந்து இதுபோன்ற காய்கறிகளை ஏற்றிச் செல்வதற்கு லாரியைத் தவிர மற்றவாகனங்கள் தயாராக இல்லை. இதனால் மலைப் பகுதிகளில் இதுபோன்ற காய்கறிகள் ஏராளமாகத்தேங்கியுள்ளன.
மேலும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் "இங்கிலீஷ்" காய்கறிகள் கிடைக்காததால் உள்ளூரில்விளையும் சாதாரண காய்கறிகளின் விற்பனை அதிகரித்துள்ளது.
இருந்தாலும் பொதுவாக காய்கறிகளின் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. ஒரு கிலோதக்காளி ரூ.24 வரை விற்கப்படுகிறது. பஸ்கள் மற்றும் டிராக்டர்களில் வரும் காய்கறிகள் போதுமானஅளவுக்கு இல்லை என்பதே இதற்குக் காரணம்.
அரிசி விலை உயர்வு:
இதற்கிடையே லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக அரிசி விலையும் உயரத் தொடங்கியுள்ளது.
பல இடங்களில் குடோன்களில் நூற்றுக்கணக்கான மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தாலும் 2வாரங்களுக்குத்தான் அவை தாங்கும்.
இந்நிலையில் லாரிகள் ஸ்டிரைக் தொடங்கி ஒரு வாரம் முடிவடைந்து விட்டதால் தற்போது அரிசிவிலை கொஞ்சம் கொஞ்சமாக உயரத் தொடங்கிவிட்டது. வேலைநிறுத்தம் நீடித்தால் அரிசிவிலையும் தாறுமாறாக ஏறும் என்று அஞ்சப்படுகிறது.
நின்று போன டேங்கர் லாரிகள்:
இதற்கிடையே டேங்கர் லாரிகளும் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளதால் அவற்றில் பெட்ரோல், டீசல்கொண்டு செல்லப்படுவது பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை-மணலியில் நூற்றுக்கணக்கான டேங்கர் மற்றும் சமையல் காஸ் லாரிகள் வெறுமனேநின்று கொண்டிருக்கின்றன.
இப்போதைக்கு பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல், டீசல் போன்றவை தாராளமாகக்கிடைக்கின்றன. ஆனால் இந்நிலை நீடித்தால் அடுத்த ஓரிரு நாட்களில் பெட்ரோல், டீசல் மற்றும்சமையல் எரிவாயுவுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையே வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக லாரி உரிமையாளர்களைச்சந்தித்துப் பேச மத்தியில் ஆளும் பா.ஜ.கவின் முக்கியத் தலைவர்கள் முடிவெடுத்துள்ளனர். இதற்காகஅவர்கள் லாரி உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications