வேலூர் கொலை- கொள்ளை: தீவிர விசாரணை நடப்பதாக ஜெ. தகவல்
சென்னை:
வேலூர் நகைக் கடை அதிபர் உள்ளிட்ட 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் போலீசார் தீவிரவிசாரணை நடத்தி வருவதாக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சமீபத்தில் வேலூரில் உள்ள ஒரு நகைக் கடையில் புகுந்த கொள்ளையர்கள் நகைக் கடை அதிபர்உள்ளிட்ட 3 பேரைச் சுட்டுக் கொன்று நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு ஓடி விட்டனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேலூர்எம்.எல்.ஏ. ஞானசேகரன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஹேமச்சந்திரன் மற்றும்பார்வர்ட் பிளாக் உறுப்பினர் சந்தானம் ஆகியோர் சட்டசபையில் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானம்கொண்டு வந்தனர்.
ஞானசேகரன்: அதி நவீன துப்பாக்கிகளுடன் வேலூரின் முக்கியமான நகைக் கடை பஜாரில்புகுந்த கொள்ளையர்கள் ஏதோ உறவினர்களின் வீட்டுக் வந்துசென்றது போல் வந்து சென்றுள்ளனர்.இதனால் சட்டம்-ஒழுங்கு கெட்டுள்ளது.
ஹேமச்சந்திரன்: கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் நிறைய கொலை, கொள்ளைச் சம்பவங்கள்நடந்துள்ளன. இவற்றைத் தடுக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
சந்தானம்: போலீசார் 24 மணி நேரமும் விழிப்புடன் இருந்து மக்களின் உயிரையும் உடமையையும்பாதுகாக்க வேண்டும்.
அவர்களுக்குப் பதிலளித்துப் பேசிய ஜெயலலிதா, வேலூரில் நடந்த சம்பவங்கள் குறித்துவிசாரிப்பதற்காக 6 தனிப் போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மட்டுமில்லாமல் ஆந்திராவிற்கும் சென்று போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணைநடத்தி வருகின்றனர். இந்தக் கொள்ளையர்கள் தொடர்பாக தமிழகம் முழுவதும்உஷார்படுத்தப்பட்டுள்ளது.
கொள்ளையர்கள் பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. அதில் கொள்ளையர்களின் கை ரேகைகள் பதிவாகியுள்ளன. இதையடுத்துதடயவியல் நிபுணர்களும் தங்கள் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
கொள்ளையர்கள் பயன்படுத்திய துப்பாக்கியில் வெடித்த 3 குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.விரைவில் கொலையாளிகள் பிடிபடுவார்கள் என்றார் ஜெயலலிதா.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications