திமுகவின் ஜெ. எதிர்ப்பு கூட்டம்: காங், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ. புறக்கணிப்பு
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து விவாதிக்க திமுக கூட்டியுள்ள கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லைஎன காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன.
தமிழக அரசின் நள்ளிரவுக் கைதுகள், பொடா கைதுகள், மின்சார கட்டண உயர்வு, இலவச மின்சார ரத்து, எதிர்க் கட்சிகள் மீதானஒடுக்குமுறை போன்ர நடவடிக்கைகளுக்கு எதிராக கூட்டுப் போராட்டம் நடத்துவது குறித்து விவாதிக்க நாளை அனைத்துக் கட்சிக்கூட்டத்தை கருணாநிதி கூட்டியுள்ளார்.
ஆனால், இக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் மாநிலத் தலைவர்சோ.பாலகிருஷ்ணன் திமுக தலைவர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
திமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் ஜெயலலிதா செய்து வரும் அதே அநியாயத்தைத் தான் மத்தியில்பா.ஜ.கவும் செய்கிறது. மதரீதியில் மக்களைப் பிளவுபடுத்தி தேச விரோத செயலில் ஈடுபட்டுள்ளது. அந்தக் கட்சி தான் பொடாவையேகொண்டு வந்தது.
அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு பொடாவை எதிர்ப்பதாக திமுக சொல்வது சரியல்ல. இதனால் கருணாநிதி கூட்டியுள்ளகூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.
ஜெயலலிதாவுக்கும் ஆர்,எஸ்.எஸ்.. வி.எச்.பி., பஜ்ரங் தள் போன்ற மதவாதக் கும்பலுக்கும் மறைமுகமான தொடர்பு உள்ளது என்றுகூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் கூறுகையில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணியில் திமுக இருக்கும் வரை நாங்கள் திமுக நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட்:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு, கருணாநிதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
மத்திய பா.ஜ.க. அரசின் மறைமுக ஆதரவும், பொடா சட்டமும் தான் ஜெயலலிதாவின் அட்டூழியங்களுக்குக் காரணம். அதுபோன்றபா.ஜ.கவுடன் போய் கூட்டணி வைத்துள்ள திமுகவின் கூட்டத்தில் நாங்கள் பங்கேற்கத் தயாராக இல்லை என்று கூறியுள்ளார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications