தமிழகத்தில் 50% தம்பதிகளுக்கு தனி பெட்ரூம் இல்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் வெறும் 39 சதவீத வீடுகளில் மட்டுமே கழிப்பறை மற்றும் குளியலைறகள் உள்ளதாக 2001ம் ஆண்டின்சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் உள்ள வீடுகள் மற்றும் அவற்றின் வசதிகள் குறித்த கணக்கெடுப்பு 2001ம் ஆண்டு நடைபெற்றது.அதன் அறிக்கையை தமிழக சென்ஸஸ் தலைவர் சந்திரமெளலி இன்று வெளியிட்டார்.

அதன் கூறப்பட்டுள்ள விவரங்கள்:

கடந்த 1991ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் 1,45,35,455 வீடுகள் இருந்தன. அது தற்போது1,69,96,604ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் திருமணமான தம்பதிகளில் 50 சதவீதம் பேருக்கு வீட்டில் தனியாக படுக்கை அறை இல்லை. மொத்தம் 1.18 கோடிதிருமணமான தம்பதிகள் உள்ளனர். இவர்களில் 49.31 சதவீதம் பேருக்கு மட்டுமே வீடுகளில் தனி படுக்கை அறை உள்ளது. மற்றவர்களுக்குஇல்லை.

இந்தக் கணக்கு ஊரகப் பகுதிகளில் 42.58 சதவீதமாகவும், நகரப் பகுதிகளில் 58.17 சதவீதமாகவும் உள்ளது.

தமிழகத்தின் மிகப்பெரும் சொத்தாகஇருந்த கூட்டுக் குடும்ப முறை தற்போது உடைந்து வருவதையும் இந்தக் கருத்துக் கணிப்புதெளிவுபடுத்தியுள்ளது.

24.24 சதவீத வீடுகளில் திருமணமான தம்பதிகள் யாரும் இல்லை.

மேலும் 1,41,73,626 வீடுகளில் 39.89 சதவீத வீடுகளில் மட்டுமே வீட்டுக்குள்ளேயே குளியலறை வசதி உள்ளது.

தமிழகத்தில் சுமார் 58.52 சதவீத மக்கள் மட்டுமே நிரந்தரமாக ஒரு வீட்டில் தங்கியுள்ளனர். சுமார் 23.31 சதவீதமக்கள் அவ்வப்போது வீடுகளை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். மேலும் 18.15 சதவீத மக்கள் வேறு இடத்தில்தங்கி விட்டு மீண்டும் சொந்த வீட்டிற்கே வந்து விடுகின்றனர்.

சுமார் 78.18 சதவீத மக்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். முந்தைய கணக்கெடுப்பில் இது 54.75சதவீதமாகத்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 21.08 சதவீத மக்கள் கெரசின் விளக்குகளையேபயன்படுத்தி வருகின்றனர்.

சுமார் 0.38 சதவீத மக்களின் வீடுகள் இருண்ட வீடுகள்தான். அவர்களுடைய வீட்டில் மின்சார விளக்கும்கிடையாது. கெரசின் விளக்கும் கிடையாது.

சமையலுக்கென விறகுகளை மட்டுமே சுமார் 64.26 சதவீத மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சுமார் 19.08சதவீதம் பேர் காஸ் அடுப்புகளைப் பயன்படுத்துகிறார்கள். மேலும் 13.09 சதவீதம் மக்கள் கெரசின் ஸ்டவ்களைப்பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

96 சதவீத வீடுகளுக்கு அருகில் உள்ள நகராட்சி குழாய்கள், அடி குழாய்கள், போர்வெல் குழாய்கள் அல்லதுகிணறுகள் மூலம் மக்களுக்கு குடிநீர் கிடைக்கிறது. ஆனால் ஆண்டு முழுவதும் குடிநீர் கிடைக்கிறா என்பது மிகப்பெரும் கேள்விக் குறிதான்.

கடந்த 1991ம் ஆண்டு கணக்கெடுப்பின்போது இருந்ததை விட தற்போது குறைவான வீடுகளில்தான் குடிநீர் வசதிஇருப்பதாகவும் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

இதைத் தவிர 67.11 சதவீத வீடுகள் மட்டுமே தனி சமையல் அறைகளைக் கொண்டுள்ளன. 20.17 சதவீத வீடுகளில்தனி சமையல் அறை கிடையாது.

மேலும் சுமார் 43.55 சதவீத வீடுகளில் ரேடியோவும், 39.48 சதவீத வீடுகளில் டி.வியும், 11.24 சதவீத வீடுகளில்தொலைபேசியும், 42.44 சதவீத வீடுகளில் சைக்கிளும், 16.09 சதவீத வீடுகளில் பைக்கும், 2.18 சதவீத வீடுகளில்கார், ஜீப் போன்ற 4 சக்கர வாகனங்களும் உள்ளன.

கிராமப் பகுதிகளில் 40.06 சதவீத வீடுகளிலும், நகர்ப் பகுதிகளில் 21.60 வீடுகளிலும் ரேடியோ உள்படஇந்தப் பொருள்கள் ஏதும் இல்லை. அவர்கள் பரம ஏழைகள்.

69 சதவீத வீடுகள் ஒன்று அல்லது இரண்டு அறைகளை மட்டுமே கொண்டுள்ளன. 19.87 சதவீத வீடுகளில் தான் 3அறைகள் உள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+