சு.சுவாமிக்கு "இசட்" பிரிவு பாதுகாப்பு தொடரும்: கெளடா. ராவ், குஜாராலுக்கு காலி
சென்னை:
ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் முன்னாள் பிரதமர்கள் தேவே கெளடா, நரசிம்ம ராவ், குஜ்ரால் ஆகியோருக்கு கமாண்டோ படை பாதுகாப்பு ரத்துசெய்யப்படுகிறது.
சுப்பிரமணியம் சுவாமி இப்போது எந்தமுக்கியப் பதவியிலும் இல்லை. ஒரு காலத்தில் மத்திய அமைச்சராக இருந்தார். அதன் பின்னர்வெறும் எம்.பி தான். இவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பைத் தொடர வேண்டும் என்பதற்காக பிரதமராக இருந்த நரசிம்மராவ், இவரைகேபினட் அமைச்சர் அந்தஸ்திலான ஒரு பதவியில் அமர்த்தினார்.
உலக வர்த்த அமைப்பிற்கான இந்திய பிரதிநிதி போன்ற ஒரு உப்புக்குச் சப்பாணி பதவி அது. அதிகாரம் ஏதும் இல்லாவிட்டாலும் கேபினட்அந்தஸ்து கிடைத்தது. இதனால் இசட் பிரிவு பாதுகாப்பும் கிடைத்தது.
அடுத்து வந்த ஆட்சிகள் அந்தப் பதவியை சுவாமியிடம் இருந்து பறித்துவிட்டன. ஆனாலும் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்புதொடர்ந்தது. கிட்டத்தட்ட 20 கறுப்புப் பூனைப் படையினர் 24 மணி நேரமும் இவருக்கு ஷிப்ட் முறையில் பாதுகாப்புத் தந்து வருகின்றனர்.
இந்தப் படையினருக்காக சென்னையில் பெரிய வீடும், பல கார்களும் கூட ஒதுக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் சுவாமிக்குத் தரப்பட்டு வரும் இசட் பிரிவு பாதுகாப்பை வாபஸ் பெறக் கோரி வக்கீல் மலைமேல் பாண்டியன் என்பவர்சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அவர் எந்தப் பதவியிலும் இல்லாததால் அவரது இசட் பிரிவு பாதுகாப்பை வாபஸ் பெற்று பொது மக்களின் பணம் வீணடிக்கப்படாமல்தடுக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.மத்திய அரசிடமும் விளக்கம் கேட்டது.
அப்போது, சுவாமியின் உயிருக்கு விடுதலைப் புலிகள் உள்ளிட்ட சில அமைப்புகளால் மிரட்டல் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.இதனால் அவருக்கு பாதுகாப்பைத் தொடர வேண்டி இருப்பதாகவும் கூறியது.
மத்திய அரசின் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சுவாமிக்கு கொடுக்கப்பட்டு வரும் இசட் பிரிவு பாதுகாப்பு தொடரவேண்டும் என உத்தரவிட்டனர்.
மலைமேல் பாண்டியனின் மனுவையும் தள்ளுபடி செய்தனர்.
மத்தியில் எந்த ஆட்சி இருந்தாலும் டெல்லியில் சுப்பிரமணியம் சுவாமிக்கு என்று தனிப்பட்ட செல்வாக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவுடனான உறவை சீர் செய்தவர்களில் முக்கியமானவர் சுவாமி. இவரது உதவியை இந்தியவெளியுறவுத்துறையான ரா பலமுறை கேட்டுப் பெற்றுள்ளது.
கெளடாவுக்கு வாபஸ்:
இதற்கிடையே முன்னாள் பிரதமர் தேவே கெளடாவுக்குத் தரப்பட்டு வந்த கமாண்டோ படைப் பாதுகாப்பை மத்திய அரசு இன்று திரும்பப்பெற்றுக் கொண்டது. இசட் பிரிவு கமாண்டோக்களுக்குப் பதிலாக இனி லோக்கல் போலீஸ் பாதுகாப்பு தான் வழங்கப்படும்.
ராவும் இழக்கிறார்:
மேலும் முன்னாள் பிரதமர்கள் குஜ்ரால், நரசிம்ம ராவ் ஆகியோருக்கும் இசட் பிரிவு கமாண்டோ படைப் பாதுகாப்பை வாபஸ் பெறவும்முடி செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுவிட்டது. இனி இவர்களுக்கு டெல்லி போலீஸ் தான் பாதுகாப்பு தரஉள்ளது. வி.பி.சிங், சந்திரசேகர் ஆகிய முன்னாள் பிரதமர்களுக்கும் டெல்லி போலீஸ் தான் பாதுகாப்புத் தந்து வருகிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications