விரைவில் தமிழகத்தில் 1,008 கோவில்களுக்கு கும்பாபிஷேகம்
சென்னை:
தமிழகத்தில் 1,008 கோவில்களுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.சி.ராமசாமிதெரிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு ராசியான எண் 9 என்பதால் அந்தக் கூட்டுத் தொகை வரும் வகையில் 1,008 கோவில்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே, 1,008 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சட்டசபையில் இந்து அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கைகளை சமர்பித்து அமைச்சர் பேசுரையில்,
2003-04க்குள் 1008 கோவில்களில் புனரமைப்புப் பணிகள்முடிந்து விடும். அதன் பிறகு அந்தக் கோவில்களுக்கு கும்பாபிஷேகம்நடத்தப்படும். மாநிலத்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும், ஒரு கால பூஜை சிறப்பாக நடைபெறுவதற்கு தேவையான நடவடிக்கையைஅரசு எடுத்து வருகிறது.
மொத்தம் 94 கோவில்களில் அனைத்து கால பூஜைகளையும் மேற்கொள்ளஅரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பொருளாதாரரீதியில் நல்லநிலையில் உள்ள 37 கோவில்களின் வருமானத்தை எடுத்து இந்த 94 கோவில்களிலும் அனைத்து கால பூஜைகளுக்குத் தேவையான நிதிவழங்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் கும்பகோணத்தில் நடைபெறவுள்ள மகாமகம் விழாவை ரூ. 1 கோடி செலவில் நடத்த அரசுதிட்டமிட்டுள்ளது.இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வராமல், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் இருக்கும் 250 கோவில்களுக்குதலா ரூ. 25,000 நிதியுதவி வழங்கப்படும் என்றார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications