கொளுத்தும் வெயிலுக்கு 61 வயது முதியவர், தர்ஹா யானை பலி
சென்னை & அம்பாசமுத்திரம்:
சென்னை அருகே அம்பத்தூரில் கடும் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து 61வயது முதியவர் பரிதாபமாக இறந்தார். அதேபோல் அம்பாசமுத்திரத்தில் ஒரு தர்ஹா யானைவெயில் காரணமாக மூளை பாதிக்கப்பட்டு உயிரிழந்தது.
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடும் வெயில் கொளுத்தி வருகிறது.வெயில் கொடுமை தாங்க முடியாமல் கொடைக்கானல், ஊட்டி என்று மக்கள் கிளம்பிக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் அம்பத்தூரில் 61 வயது முதியவர் வெயிலுக்குப் பலியாகியுள்ளார். அம்பத்தூர்எம்.டி.எச். சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த அந்த முதியவர் திடீரென மயங்கி விழுந்துஅங்கேயே இறந்தார்.
அவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்ஹா யானை சாவு:
இதற்கிடையே வெயிலின் கொடுமை தாங்கடியாமல், திருநெல்வேலி மாவட்டம்அம்பாசமுத்திரத்தில் உள்ள ரஹமத்துல்லா அப்பா தர்ஹாவைச் சேர்ந்த யானை இறந்தது.
அம்பாசமுத்திரம் அருகே உள்ளது கல்லிடைக்குறிச்சி. இங்கு ரஹமத்துல்லா அப்பாதர்ஹா உள்ளது. இந்த தர்ஹாவில் சில யானைகள் உள்ளன. தலைமை யானையாக ஆதித்தியா என்றயானை இருந்து வந்தது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆதித்தியாவுக்கு மதம் பிடித்துள்ளது. பாகனின் கட்டுப்பாட்டைமீறியதைத் தொடர்ந்து அது சங்கிலியால் பிணைத்து வைக்கப்பட்டது. டாக்டர்கள் அந்த யானையைசோதித்தபோது, கடும் வெயில் காரணமாக அதன் மூளை பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
கட்டி வைக்கப்பட்டிருந்த யானை சில நாட்களாக சரியாகவே சாப்பிடவில்லை. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மயக்கமடைந்து அன்று இரவே ஆதித்தியா இறந்து விட்டது.
நேற்று காலை அதன் தந்தங்களை வனத்துறையினர் வெட்டியெடுத்தனர்.
பின்னர் யானையின் உடல் தர்ஹா நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் ஏராளமான மக்கள்அஞ்சலி செலுத்த, ஆதித்தியா நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications