டெல்லி தமிழர்களுக்கு இட ஒதுக்கீடு: அதிமுக கோரிக்கை
டெல்லி:
டெல்லியில் உள்ள தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீடுகள் மறுக்கப்படுவதாகவும்இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி.மலைச்சாமி கோரிக்கை விடுத்தார்.
மலைச்சாமி நேற்று மக்களவையில் பேசுகையில்,
மண்டல் கமிஷன் பரிந்துரைகளின் படி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் பட்டியல் மாநிலவாரியாகத்தான் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்குச்சென்று குடியேறுபவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படகின்றனர்.
புதிதாக அவர்கள் குடியேறியுள்ள மாநிலத்தின் இட ஒதுக்கீட்டுப் பட்டியலிலும் அவர்களுடைய ஜாதிஇருந்தால் மட்டுமே அவர்கள் அதை அனுபவிக்க முடியும்.
இதனால் டெல்லியில் குடியேறியுள்ள ஏராளமான தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழத்தின் இடஒதுக்கீட்டுப் பட்டியலில் உள்ள பல ஜாதிகள், டெல்லி பட்டியலில் காணப்படவில்லை.
ஒரு மாநிலத்திலிருந்து மக்கள் வேறு மாநிலங்களுக்குச் சென்று குடியேறுவது வழக்கமானஒன்றுதான். அதுபோலவே தமிழகத்திலிருந்தும் ஏராளமான தமிழர்கள் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் குடியேறி உள்ளனர்.
ஆனால் அங்கு தங்களுக்குக் கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீடு கிடைக்காமல் டெல்லித் தமிழர்கள்அவதிப்பட்டு வருகின்றனர்.
இதே போலத்தான் ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்திற்குச் செல்லும் லட்சக்கணக்கான மக்கள்பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதைத் தேசியப் பிரச்சனையாகக் கருத்தில் கொண்டு மத்திய அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதலில் டெல்லித் தமிழர்களின் பிரச்சனைகளுக்கு இடைக்காலத் தீர்வு ஒன்றை மத்திய அரசுகொண்டுவர வேண்டும் என்றார் மலைச்சாமி.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications