ஜெயலலிதாவை விமர்சித்த வழக்கு: பாமக எம்.எல்.ஏ கோர்ட்டில் ஆஜர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் பாட்டாளி மக்கள் கட்சிஎம்.எல்.ஏவான காடுவெட்டி குரு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூல் நடந்த வன்னியர் வாழ்வுரிமை மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா குறித்துஅவதூறாகப் பேசியதாக இவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குரு மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை போலீஸ்வசம் சிக்கமாமல் இருந்த குரு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்த வழக்கு விசாரணை வரும் 5ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜெயங்கொண்டத்தில் தியேட்டரைத்தாக்கிவிட்டு பாபா படச் சுருளை அள்ளிச் சென்ற பா.ம.கவினரை தலைமை தாங்கி கூட்டி வந்தவர் காடுவெட்டி குருதான்.

இவர் டாக்டர் ராமதாசின் வலதுகரம் என்பது குறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+