சேலம் சிறுவனுக்கு தாயின் இனிஷியல்!
சேலம்:
சேலத்தைச் சேர்ந்த 3 வயது சிறுவனுக்கு அவனுடைய தாய் பெயரின் முதல் எழுத்து இனிஷியலாகவைக்கப்பட்டுள்ளது.
தாய் பெயரின் முதல் எழுத்தையும் குழந்தைகளுக்கு இனிஷியலாகப் போட்டுக் கொள்ளலாம் என்றுசமீபத்தில் தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதுதொடர்பான புதியஅரசாணை ஒன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்திலேயே முதல் முறையாக சேலத்தைச் சேர்ந்த 3 வயது சிறுவனுக்குஅவனுடைய தாய் பெயரின் முதல் எழுத்து இனிஷியலாக வைக்கப்பட்டுள்ளது.
சேலம் கொங்கனாபுரத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் நிதீஷ். அவன் தற்போது ஒருபள்ளியில் எல்.கே.ஜி. படிக்க சேர்ந்துள்ளான்.
அப்போது அவனுக்கு அவனுடைய தாய் விமலா தேவியின் முதல் எழுத்தான "வி" என்ற எழுத்துஇனிஷியலாக வைக்கப்பட்டுள்ளது. சரவணனும் முழு சம்மதம் தெரிவித்த பின்னரே நிதீஷுக்குஇனிஷியல் வைக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
-->












Click it and Unblock the Notifications