நன்கொடை: தனியார் என்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை மீண்டும் எச்சரிக்கை
சென்னை:
மாணவர்களிடமிருந்து தனியார் பொறியியல் கல்லூரிகள் நன்கொடை வசூலித்தால்அக்கல்லூரியின் நிர்வாகிகளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி என்று அண்ணாபல்கலைக்கழகம் மீண்டும் எச்சரித்துள்ளது.
சுயநிதி மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் தங்களிடம் படிக்க வரும் மாணவ,மாணவிகளிடம் ரூ.50,000 முதல் பல லட்ச ரூபாய் வரை நன்கொடையாக வசூலிக்கப்படுகின்றன.
ஆனால் மாணவ, மாணவிகளிடமிருந்து நன்கொடை பெற்றால் அக்கல்லூரி நிர்வாகிகள் 3 ஆண்டுசிறையில் தள்ளப்படுவார்கள் என்று அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் எச்சரிக்கைவிடுத்திருந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ள அண்ணா பல்கலைக்கழகதுணைவேந்தர் டாக்டர் பாலகுருசாமி இன்று நிருபர்களிடம் பேசுகையில்,
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலேயே பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டு முறைபின்பற்றப்படும்.
நன்கொடை வசூலிக்கும் கல்லூரி நிர்வாகிகளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி. எனவேதனியார் கல்லூரிகள் இவ்விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கான கவுன்சலிங்வரும் ஜூன் 23ம் தேதி தொடங்குகிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 14ம் தேதி முதல்வழங்கப்படும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 4ம் தேதி கடைசி நாளாகும் என்றார் டாக்டர்பாலகுருசாமி.












Click it and Unblock the Notifications