கிருஷ்ணாவின் பேச்சு ஒரு ஏமாற்றும் செயல்: ஜெயலலிதா
சென்னை:
காவிரிப் பிரச்சனையில் கர்நாடகத்துடன் பேச்சு நடத்துவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்றுமுதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சமீபத்தில் திருப்பதி வந்த கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, காவிரி விவகாரம் குறித்து தமிழகத்துடன் பேச்சு நடத்தத்தயாராக இருப்பதாகவும், இந்த விவகாரத்தை நடுவர் மன்றம் மற்றும் நீதிமன்றங்களில் இருந்து வாபஸ் பெற்றுபேச்சு நடத்த முன் வர வேண்டும் என்றும் தமிழகத்துக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.
கிருஷ்ணாவின் இந்த அழைப்பை ஜெயலலிதா ஏற்க வேண்டும் என காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள்கோரிக்கை விடுத்தன. ஆனால், இது கர்நாடகத்தின் ஏமாற்று வேலைகளில் ஒன்று எனவும் கிருஷ்ணாவின் இந்தக்கோரிக்கையை அரசு ஏற்கக் கூடாது என பா.ம.க. நிறுவனர் ராமதாசும் கூறியிருந்தனர்.
இந் நிலையில் சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன் அவை விதி 110வது விதியின் கீழ் காவிரிவிவகாரம் குறித்து ஜெயலலிதா தானாகவே முன் வந்து ஒரு அறிக்கையை தாக்கல் செய்து பேசினார். அப்போதுஅவர் கூறுகையில்,
காவிரிப் பிரச்சனை குறித்து கடந்த 5 ஆண்டுகளில் கர்நாடகத்துடன் 26 முறை பேச்சு நடத்தப்பட்டது. ஆனால்,எந்தப் பயனும் ஏற்படவில்லை.
கர்நாடகம் ஏமாற்றியதால் சம்பா சாகுபடியும், குறுவை சாகுபடியையும் இழந்த தமிழக விவசாயிகள் பெரும்துயரத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந் நிலையில் பேச்சு நடத்தலாம் என்று கர்நாடக முதல்வர் கூறுவது வெந்தபுண்ணில் வேலைப் பாய்ச்சுவதற்கு சமம். நீதிமன்றத்தையே மதிக்காத கர்நாடகம் பேச்சுவார்த்தையில் ஏற்படும்முடிவையா மதிக்கப் போகிறது.
இந்தப் பிரச்சனையில் உச்ச நீதிமன்றமும் காவிரி நடுவர் மன்றமும் தான் தமிழகத்துக்கு நியாயம் வழங்க முடியும்.இதனால் கர்நாடகத்துடன் பேச்சு நடத்த வாய்ப்பே இல்லை. பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற கிருஷ்ணாவின்கோரிக்கை ஒரு ஏமாற்றும் செயல். இதன்மூலம் தமிழகத்துக்கு சட்டரீதியில் நியாயம் கிடைப்பதைத் தடுக்க அவர்முயல்கிறார்.
பேச்சு நடத்துவோம் என்று சொல்லி தமிழகத்துக்கு நீர் தராமல் இழுத்தடிப்பது தான் அவரது நோக்கம். கர்நாடகமுதல்வர் கிருஷ்ணாவின் யோசனையை நிராகரிக்கிறேன் என்றார் ஜெயலலிதா.
சார்ஸ் நடவடிக்கை:
மேலும் தொடர்ந்து பேசிய ஜெயலலிதா சார்ஸ் நோய் பரவாமல் தடுக்க தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்குறித்து ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையில்,
சார்ஸ் நோய் பரவலைத் தடுக்கவும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் அரசுமருத்துவமனைகளைத் தயார் செய்து வைத்திருக்கிறோம். சென்னை உள்ளிட்ட மாவட்டத் தலைநகர்களில் உள்ளமருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டுள்ளன.
மருத்துவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
துளசி, மஞ்சள், மிளகு ஆகியவற்றை அதிகம் பயன்படுத்தினால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனசிங்கப்பூர் மருத்துவர்களே கூறியுள்ளனர். மேலும் பப்பாளியை அதிகம் உண்டாலும் ரத்தம் சுத்தமாவதோடுஉடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் கூடுகிறது.
இதன் மூலம் சார்ஸ் நம்மை அணுகாமல் தடுத்திட முடியும்.
நெய்வேலி, சேலம்: ஜெ. கோரிக்கை
லாபகரமாக இயங்கி வரும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தையும் சேலம் இரும்பு ஆலையையும் தனியாருக்குவிற்கக் கூடாது என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்றார் ஜெயலலிதா.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications