சென்னையில் வாஜ்பாயை புறக்கணித்த ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிரதமர் வாஜ்பாய் கலந்து கொண்ட விமான நிலையத் திறப்பு விழா நிகழ்ச்சியை முதல்வர்ஜெயலலிதா கடைசி நேரத்தில் புறக்கணித்தார். தமிழக அமைச்சர்களும் இவ்விழாவைப்புறக்கணித்து விட்டதால் மாநில பா.ஜ.க. தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Jayalalithaa&Vajpayee

விமான நிலையத்தில் வாஜ்பாயுடன் ஜெயலலிதா

சென்னை விமான நிலையத்தில் உள்ள அண்ணா பன்னாட்டு முனையம் விரிவாக்கம் செய்யப்பட்டுஇதற்கான புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.

இந்தப் புதிய கட்டடங்களைத் திறந்து வைப்பதற்காக நேற்று மாலை வாஜ்பாய் வந்தார். அவரைதமிழக ஆளுநர் ராமமோகன் ராவும் ஜெயலலிதாவும் மற்ற தமிழக அமைச்சர்களும் பூச்செண்டுகொடுத்து அன்புடன் வரவேற்றனர். தொடர்ந்து பா.ஜ.க. மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாசும் பிரதமரை வரவேற்றனர்.

இதையடுத்து பிரதமர் விமான நிலையத்திலேயே ஓய்வெடுத்துக் கொண்டு மாலை 5.30 மணிக்குநடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

கிளம்பிப் போன ஜெயலலிதா:

ஆனால், விழாவின் முதன்மை சிறப்பு விருந்தினராக அறிவிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாஇந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமலேயே புறக்கணித்து விட்டார். பிரதமரை வரவேற்ற கையோடுஅவர் விமான நிலையத்தை விட்டு தன்னுடைய போயஸ் தோட்டத்திற்குச் சென்று விட்டார்.

ஜெயலலிதா கலந்து கொள்ளாததால் சிறிது நேரம் தமிழக அமைச்சர்கள் குழம்பிய நிலையில்இருந்தனர். என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினர். உடனே பொன்னையன் போயஸ்தோட்டத்தைத் தொடர்பு கொண்டு பேச, அங்கிருந்து என்ன பதில் வந்ததோ அனைத்துஅமைச்சர்களையும் அழைத்துக் கொண்டு இடத்தைக் காலி செய்தார்.

பன்னீரின் சோகம்:

அங்கேயே இருக்குமாறு அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு உத்தரவு வந்தது. அவர் மகாகுழப்பத்துடன் உட்கார்ந்திருந்தார். அமைச்சர் பட்டாளமும் எம்.எல்.ஏக்களும் கூட்டமாகவெளியேறியதால் நூற்றுக்கணக்கான சேர்கள் காலியாயின. பன்னீர் மட்டும் நூற்றுக்கணக்கானசேர்களுக்கு மத்தியில் ஒரு சேரில் தனியே உட்கார்ந்திருந்தார்.

Panneer Selvam

தனியே தன்னந்தனியே.. அமைச்சர் பன்னீர்செல்வம்

சிறிது நேரத்தில் மேடையில் அமர்ந்திருந்த பிரதமரிடம் சென்ற தமிழக அரசின் தலைமைச்செயலாளரான லட்சுமி பிரானேஷ் சென்று அவரிடம் ஏதோ கூறினார். அதை வாஜ்பாய் முகத்தில்ரியாக்சன் எதையும் காட்டாமல் கேட்டுக் கொள்ள, பின்னர் அவரும் மேடையை விட்டு இறங்கிச்சென்று விட்டார்.

டி.ஆர்.பாலுவால் வந்த தடை:

ஜெயலலிதா விமான நிலையத் திறப்பு விழா நிகழ்ச்சியைப் புறக்கணித்துள்ளதற்குப் பல்வேறுகாரணங்கள் கூறப்படுகின்றன.

இவ்விழாவில் திமுகவைச் சேர்ந்த மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சரான டி.ஆர். பாலு சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டார். விமான நிலையம் இருக்கும் இடம் அவரது தென் சென்னைதொகுதியில் வருவதால் அவரையும் விழாவுக்கு விமானத்துறை அழைத்திருந்தது.

சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரியை இடிப்பதற்கு சமீபத்தில் பாலு தான் தடை விதித்தார்என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அவருடன் சேர்ந்து மேடை ஏறுவதைத் தவிர்க்கவே ஜெயலலிதாவிழாவைப் புறக்கணித்தார் என்று கூறப்படுகிறது.

வாஜ்பாய் மீது கோபம்:

மேலும், மத்திய அரசில் திமுக தொடர்ந்து நீடிப்பதற்கு வாஜ்பாய்தான் காரணம் என ஜெயலலிதாநம்புகிறார். துணைப் பிரதமர் அத்வானி தனக்கு ஆதரவாகச் செயல்பட்டாலும் கூட, வாஜ்பாய்அதற்குத் தடையாக உள்ளதாக ஜெயலலிதா நினைக்கிறார். அதனாலேயே இவ்விழாவை ஜெயலலிதாபுறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது.

தவிர, இந்த விமான நிலையத் திறப்பு விழாவில் அத்வானிதான் கலந்து கொள்வார் என்று முதலில்கூறப்பட்டது. இதனால் விழாவில் தானும் பங்கேற்க ஜெயலலிதா சந்தோஷமாக சம்மதித்தார்.ஆனால் பின்னர் வாஜ்பாய்தான் புதிய கட்டடங்களைத் திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் ஏமாற்றம் அடைந்த ஜெயலலிதா இவ்விழாவைப் புறக்கணித்தார் என்றும் கூறப்படுகிறது.

ஜெவை சந்திக்க மறுத்த வாஜ்பாய்:

Vajpayee&Thirunavukarasu

வாஜ்பாயை வரவேற்கும் திருநாவுக்கரசர்

திறப்பு விழாவிற்கு முன் 10 நிமிடங்கள் விமான நிலையத்திலேயே தங்கி ஓய்வெடுத்துக்கொண்டிருந்த பிரதமருடன் ஜெயலலிதாவைத் தனியாக சந்திக்க வைப்பதற்கான முயற்சிகளும்மேற்கொள்ளப்பட்டன. ஆனால், ஜெயலலிதாவைச் சந்திக்க வாஜ்பாய் தரப்பிலிருந்து எந்த"சிக்னலும்" கிடைக்கவில்லை.

இதனாலும் விழாவை ஜெயலலிதா புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது.

விழா முடிந்த பின்னர் பிரதமரை டெல்லிக்கு வழியனுப்பவாவது ஜெயலலிதா வருவார் என்றுஅனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், விழாவிலேயே உட்கார வைக்கப்பட்ட பொதுப்பணித் துறைஅமைச்சரான பன்னீர்செல்வம்தான் வாஜ்பாயை வழியனுப்பி வைத்தார்.

இந்நிலையில் விமான நிலையத் திறப்பு விழாவை ஜெயலலிதா புறக்கணிப்பு செய்தது அரசியல்வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. பிரதமர் சென்னை வந்த நிலையில் அவரிடம்மேடையிலேயே வைத்து மாநிலத்துக்குத் தேவையான சில கோரிக்கைகளை ஜெயலலிதாவலியுறுத்தி இருக்கலாம்.

ஆனால், இதிலும் அரசியல் செய்து தமிழகத்துக்கு உதவி கேட்பதைக் கூட ஜெயலலிதாதவிர்த்துள்ளார்.

கருணாநிதியை தவிர்த்த வாஜ்பாய்:

Vajpayee&Ramadoss

வாஜ்பாயுடன் ராமதாஸ்

இதற்கிடையே திமுக சார்பில் இவ்விழாவில் பாலு மட்டுமே கலந்து கொண்டார். கெளரவவிருந்தினராக அழைக்கப்பட்டிருந்த பாலு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

மேலும் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்ட பிரதமர், சென்னைநகருக்குள் போவதையே தவிர்த்து விட்டு விமான நிலையத்திலேயே தங்கியிருந்து திறப்பு விழாவில்கலந்து கொண்டு விட்டு டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

முன்னதாக திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து உடல் நிலை குறித்து வாஜ்பாய் விசாரிக்கலாம்என்று கூறப்பட்டது. ஆனால், அதை அத்வானி தடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+