நெப்போலியனிடம் உதவி கேட்ட ஜி.வி.!
சென்னை:
தனக்கு நிதியுதவி செய்யுமாறு நடிகர் நெப்போலியனிடம் தயாரிப்பாளர் ஜி.வி. கேட்டிருந்தார்.அதற்கு நெப்போலியன் பதில் தருவதற்குள் தற்கொலைசெய்து கொண்டு விட்டார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முதல் நாள் காலை நடிகர் நெப்போலியனைத்தொடர்புகொண்டுள்ளார் ஜி.வி. முக்கியமான ஒரு விஷயம் பேசவேண்டும், சந்திக்க வரலாமா என்று கேட்டுள்ளார் ஜி.வி.
அதற்கு நெப்போலியன், நான் வயதில் சிறியவன், எனவே என்னைத் தேடி நீங்கள் வருவது நன்றாகஇருக்காது. நானே மாலையில் வருகிறேன் என்றுகூறியுள்ளார்.
அதுபோலவே, ஜி.வியின் வீட்டுக்கு மாலை சென்றுள்ளார் நெப்போலியன். தனக்கு பெரும்கடன்சுமை ஏற்பட்டுள்ளதாகவும், உங்களால் உதவ முடியுமா என்று கேட்டுசில உதவிகளைக் கேட்டுள்ளார்ஜி.வி.
அதற்கு இன்னும் 2 நாட்களில் பதில் கூறுவதாகச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார் நெப்போலியன்.
ஆனால், அடுத்த நாளே ஜி.வி. தற்கொலை செய்து கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications