ஜெயலலிதாவுக்கு பதில் கூற கிருஷ்ணா மறுப்பு
பெங்களூர்:
காவிரி விவகாரததில் முதல்வர் ஜெயலலிதாவின் நிலை ஏமாற்றம் தருவதாக கர்நாடகம் பாசனத்துறை அமைச்சர்பாட்டீல் கூறினார்.
அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் ஜெயலலிதாவின் பேச்சுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என கர்நாடகமுதல்வர் கிருஷ்ணா கூறினார்.
இன்று பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய பாட்டீல்,
தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுடனும் நதி நீர் பிரச்சனைகள் குறித்து பேச்சு நடத்த கர்நாடகம் தயாராகஉள்ளது. இதை அடுத்தடுத்து வந்த காங்கிரஸ் அரசுகள் தெளிவுபடுத்திவிட்டன.
ஆனால், பேச்சுவார்த்தை மூலம் காவிரி விவகாரத்துக்கு தீர்வு காணலாம் என்ற முதல்வர் கிருஷ்ணாவின் கருத்துக்குபதிலளித்துள்ள முதல்வர் ஜெயலலிதா கர்நாடக அரசை தூற்றியுள்ளார். ஏமாற்றிவிட்டதாகக் கூறியுள்ளார். அவரதுபேச்சு ஏமாற்றம் தருகிறது.
இப்போதும் கூட தமிழகமும் கர்நாடகமும் பேச்சு நடத்துவது சாத்தியம் தான். இரு விவசாயிகளின் நலனைக்கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தை உகந்த சூழலை ஏற்படுத்த வேண்டியது தமிழகத்தின் கடமை என்றார் பாட்டீல்.
கிருஷ்ணா மறுப்பு:
நிருபர்களிடம் பேசிய முதல்வர் கிருஷ்ணா,
காவிரி விவகாரத்தில் என்னைத் தாக்கிப் பேசிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு பதில் கூற நான் விரும்பவில்லை.பேச்சுவார்த்தை நடத்தலாம் என்பது தான் எனது நிலை. இப்போதும் அதே நிலையில் தான் நான் இருக்கிறேன்.
காவிரியை வைத்து என்னைத் தனிப்பட்ட முறையிலும் ஜெயலலிதா விமர்சித்துள்ளார். இதற்கும் நான் பதில்சொல்லப் போவதில்லை என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications