லண்டனில் வேலை: வாலிபர்களிடம் ரூ. 25 லட்சம் மோசடி
திருச்சி:
ஐரோப்பிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏராளமான இளைஞர்களை ஏமாற்றி ரூ. 25 லட்சம் வரை சுருட்டிய இருவர் கைதுசெய்யப்பட்டனர்.
கணேஷ் சாஸ்திரி என்பவரும் அவரது கூட்டாளியான சுந்தரலிங்கம் என்பவரும் சமீபத்தில் திருச்சியில் ஒரு அலுவலகத்தைத் திறந்தனர்.வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு உள்ளதாகவும் இதில் ஆர்வம் உள்ளவர்கள் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும்நோட்டீஸ்களை அடித்து ஒட்டினர்.
மேலும் இவர்களே திருச்சியிலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் நேரில் சென்று பலரையும் சந்தித்து வெளி நாட்டு வேலை இருப்பதாகஆசை காட்டினர். குறிப்பாக பட்டம் பெற்று வேலையில்லாமல் இருப்பவர்கள், விவசாய நிலம் இருந்தும் விவசாயம் பார்க்கப் பிடிக்காமல்வேலைக்குச் செல்ல ஆர்வத்துடன் இருந்த இளைஞர்களை இவர்கள் அணுகி பேசினர்.
லண்டன் மற்றும் இத்தாலியில் வேலை வாய்ப்புகள் உள்ளதாகக் கூறினர். இவர்கள் கூறியதை நம்பி பல பட்டதாரி இளைஞர்கள் திருச்சியில்உள்ள இவர்களது அலுவலகத்துக்குப் படை எடுத்தனர். அங்கு ஒவ்வொரு இளைஞனிடமும் ரூ. 1.5 லட்சம் வரை டெபாசிட் பணமாகவாங்கிக் கொண்டனர்.
கிட்டத்தட்ட 20 பேர் இவர்களிடம் பணம் தந்தனர். தங்களை உண்மையான ஏஜென்டுகள் போலக் காட்டிக் கொள்வதற்காக தங்களதுஅலுவலத்தில் எடை பார்க்கும் கருவி, பி.பி. செக்கப் செய்யும் கருவி, ஸ்டெத்தாஸ்கோப் ஆகியவற்றையும் வைத்திருந்தனர்.
ஐரோப்பிய நாடுகளில் வேலைக்குச் செல்ல உடல் ஆரோக்கியம் இருக்க வேண்டும் என்று சொல்லி இவர்களே ஸ்டெத்தாஸ்கோப்பையும்பி.பி. அளவிடும கருவிகளையும் கொண்டு இளைஞர்களை பரிசோதித்துள்ளனர்.
இதற்காக கணேஷ் சாஸ்திரி டாக்டர் டிரஸ் அணிந்து கொண்டார் என்பது இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். இந்த இரு பிராடுகளுமே10ம் வகுப்பைத் தாண்டாத ஆசாமிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் திடீரென இருவரும் தலைமறைவாயினர். அலுவலகத்தில் பூட்டு தொங்கியது. இதையடுத்து பணம் கொடுத்து ஏமாந்து போனவாலிபர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். இந்த இரு மோசடிப் பேர்வழிகளையும் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது.
அப்போது இருவரும் ஒரு லாட்ஜில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இன்று இந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடம் இருந்து சுமார் ரூ. 20 லட்சம் பணமும் மீட்கப்பட்டுவிட்டதாக திருச்சி நகர போலீஸ் கமிஷ்னர் அலெக்சாண்டர் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications